Singer : K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Valamaana bhoomiyil sugamaana kalaigal
Azhagaana kadhalathu vilaiyaadum nilaigal
Valamaana bhoomiyil sugamaana kalaigal
Azhagaana kadhalathu vilaiyaadum nilaigal

Male : Maharani mangai enakkaga vanthaal
Malarodu malaraaga nindraal
Maharani mangai enakkaga vanthaal
Malarodu malaraaga nindraal

Male : Annaalil aval oru kaarkaalaparavai
Innaalil thanthaal enakkaga uravai
Annaalil aval oru kaarkaalaparavai
Innaalil thanthaal enakkaga uravai

Male : Pudhu thottam pudhu roja avalaagavae
Pudhu thendral pudhu geedham thaanaagavae
Pudhu thendral pudhu geedham thaanaagavae

Male : Valamaana bhoomiyil sugamaana kalaigal
Azhagaana kadhalathu vilaiyaadum nilaigal

Male : Ennaadu sendraalum panpaadum kalaimaan
Kannodu vilaiyaadum singaara tamilpoo
Ennaadu sendraalum panpaadum kalaimaan
Kannodu vilaiyaadum singaara tamilpoo

Male : Ariyaamal puriyaamal aval odinaal
Nadaimaara vazhimaara naan paadinaen
Nadaimaara vazhimaara naan paadinaen

Male : Valamaana bhoomiyil sugamaana kalaigal
Azhagaana kadhalathu vilaiyaadum nilaigal

Male : Pagalpola maaridum avaloda iravu
Padhamaaga paadidum azhagaana nilavu
Pagalpola maaridum avaloda iravu
Padhamaaga paadidum azhagaana nilavu
Ninaivendrum kanavendrum ariyaamale
Suvaiyondru pera vendum en vaazhvilae
Suvaiyondru pera vendum en vaazhvilae

Male : Valamaana bhoomiyil sugamaana kalaigal
Azhagaana kadhalathu vilaiyaadum nilaigal

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வளமான பூமியில் சுகமான கலைகள்
அழகான காதலது விளையாடும் நிலைகள்
வளமான பூமியில் சுகமான கலைகள்
அழகான காதலது விளையாடும் நிலைகள்

ஆண் : மகராணி மங்கை எனக்காக வந்தாள்
மலரோடு மலராக நின்றாள்
மகராணி மங்கை எனக்காக வந்தாள்
மலரோடு மலராக நின்றாள்

ஆண் : அந்நாளில் அவள் ஒரு கார்க்காலப்பறவை
இந்நாளில் தந்தாள் எனக்காக உறவை
அந்நாளில் அவள் ஒரு கார்க்காலப்பறவை
இந்நாளில் தந்தாள் எனக்காக உறவை

ஆண் : புதுத் தோட்டம் புது ரோஜா அவளாகவே
புது தென்றல் புது கீதம் தானாகவே
புது தென்றல் புது கீதம் தானாகவே

ஆண் : வளமான பூமியில் சுகமான கலைகள்
அழகான காதலது விளையாடும் நிலைகள்

ஆண் : எந்நாடு சென்றாலும் பண்பாடும் கலைமான்
கண்ணோடு விளையாடும் சிங்காரத் தமிழ்ப்பூ
எந்நாடு சென்றாலும் பண்பாடும் கலைமான்
கண்ணோடு விளையாடும் சிங்காரத் தமிழ்ப்பூ

ஆண் : அறியாமல் புரியாமல் அவள் ஓடினாள்
நடைமாற வழிமாற நான் பாடினேன்
நடைமாற வழிமாற நான் பாடினேன்

ஆண் : வளமான பூமியில் சுகமான கலைகள்
அழகான காதலது விளையாடும் நிலைகள்

ஆண் : பகல்போல மாறிடும் அவளோட இரவு
பதமாக பாடிடும் அழகான நிலவு
பகல்போல மாறிடும் அவளோட இரவு
பதமாக பாடிடும் அழகான நிலவு
நினைவென்றும் கனவென்றும் அறியாமலே
சுவையொன்று பெற வேண்டும் என் வாழ்விலே
சுவையொன்று பெற வேண்டும் என் வாழ்விலே

ஆண் : வளமான பூமியில் சுகமான கலைகள்
அழகான காதலது விளையாடும் நிலைகள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here