Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja
Music by : Mani Raja
Male : Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
Female : Kaadhal nenjodu kanavil kann moodu
Oru naal ponmaalai varuven unnodu
Male : Thirumaarbil kalanthaadavoo…oo oo oo
Male : Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Female : Paarvai kolathil kaadhal pulligal
Saayangalathil aasai vannangal
Male : Aa aa aa… thaer varum veedhilyilae
Oru maadhavi arangaerum
Female : Kovalan thiru maarbil
Poomalaigal varaverkkum
Male : Dhevathai siragugal aavalil viripathu
Vaanil thaavathaan
Female : Thirumagal siripathum thaen malar viripathum
Paadal paadathaan
Male : Poomaaran villyendhi varam maalaiyae
Female : Rathidevi koluverkkum raajangamae
Male : Poonthendral thaalattudhoo ..oo..oo..oo
Female : Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
Female : Vaazhvin sogangal kaneer sondhangal
Maarum nokkathil koyil deepangal
Male : Thediya sippigalil nee valamburi sangaanaai
Kaladi pattadhanaal uppu kadal neer inikkuthadi
Female : Sandhana maeni kalasam thaan
Adhai thaangi kollavoo
Male : Thaavani suttriya noolidai thuvazhudhu
Yendhi kollavaa
Female : Poo methai madi meedhu nadhiyorandhaan
Male : Samandhi suga vaasam shana nerandhaan
Thaenootru surakkindrathoo..oo..oo..oo
Male : Valarpirai kanavugal
Iniyaval varavugal kannae poochoodu
Female : Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram
Pennae saaindhaadu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : மணி ராஜா
ஆண் : வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு…
பெண் : காதல் நெஞ்சோடு கனவில் கண் மூடு
ஒரு நாள் பொன்மாலை வருவேன் உன்னோடு
ஆண் : திருமார்பில் கலந்தாடவோ…ஓஓஓ…
ஆண் : வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
பெண் : பார்வை கோலத்தில் காதல் புள்ளிகள்
சாயங்காலத்தில் ஆசை வண்ணங்கள்
ஆண் : ஆஆஆ..தேர் வரும் வீதியிலே
ஒரு மாதவி அரங்கேறும்
பெண் : கோவலன் திரு மார்பில்
பூமாலைகள் வரவேற்கும்
ஆண் : தேவதை சிறகுகள் ஆவலில் விரிப்பது
வானில் தாவத்தான்
பெண் : திருமகள் சிரிப்பதும் தேன் மலர் விரிப்பதும்
பாடல் பாடத்தான்
ஆண் : பூமாறன் வில்லேந்தி வரும் மாலையே
பெண் : ரதிதேவி கொலுவேற்க்கும் ராஜாங்கமே
ஆண் : பூந்தென்றல் தாலாட்டுதோ..ஓஓஒ…
பெண் : வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு…
பெண் : வாழ்வின் சோகங்கள் கண்ணீர் சொந்தங்கள்
மாறும் நோக்கத்தில் கோயில் தீபங்கள்
ஆண் : தேடிய சிப்பிகளில் நீ வலம்புரி சங்கானாய்
காலடி பட்டதனால் உப்புக் கடல் நீர் இனிக்குதடி
பெண் : சந்தன மேனி கலசம் தான் இதை தாங்கி கொள்ளவோ
ஆண் : தாவணி சுற்றிய நூலிடை துவளது ஏந்திக் கொள்ளவா
பெண் : பூ மெத்தை மடி மீது நதியோரந்தான்
ஆண் : சாமந்தி சுக வாசம் க்ஷண நேரந்தான்
தேனூற்று சுரக்கின்றதோ…ஓஓஒ….
ஆண் : வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
பெண் : விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு…