Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Female : Vanakkam
Mudhal variyai ezhuthum mun
En mugavariyai ezhutha enninaen
Piraguthaan vaazhththugindra idhayaththukku
Vishaalamthaan mukkiyamae thavira
Vilaasam mukkiyamalla endru vittu vittaen

Female : Pushpangal kaithatti koopidaamalayae
Vandugal varuvathu pol
Unthan nadana arangai nokki nagar thaanaagavae
Nagarnthu nagarnthu varugirathu
Kaaranam abhinayam endra sollai
Neengal adhisayam endru arththapaduththukireergal

Female : Kaattrukkooda kaarsalagai katti vidakkoodiya
Kettikaarar neengal
Male : Kaattrukkooda kaarsalagai katti vidakkoodiya
Kettikaarar neengal ahhaahhaa

Female : Ungalai sirushtiththa karvaththil
Kalaimagalae thalaikanaththu nirkkiraal

Female : Oho purigirathu
Oru paiththiyam endru ennai parikasikkireergalo
Aam paiththiyamthaan paiththiyamthaan
Naan oru tamil paiththiyam
Pin kurippu
Vittu vittu vantha en idhayaththai
Viraivil thiruppi anuppu

Male : Padiththaen padiththaen kaditham
Adadaa varigal amutham
Padiththaen padiththaen kaditham
Adadaa varigal amutham
Paper arangam muzhuthum
Unthan pen-ah munaiyin nadanam
Pen- ah munaiyin nadanam

Male : Un chiththiram kann muttrilum
Varainthaaa vendum neril vaa
Un chiththiram kann muttrilum
Varainthaaa vendum neril vaa

Male : Soppanangal unnai theda
Suvaasanal ushnam yaera
Ninaikkum ninaippae karuga
Nee anaikkum padaiyaai varuga
Anaikkum padaiyaai varuga

Female : En Snegitharae
Ungal ezhuththukkalin inippirkku
Erumbugal varakkoodum enbathaal kadithaththai
En maar siraiyil maraiththu vaiththirukkiraen
Thabaalgalaiyae thaamboolangalaaga kondu

Female : Namakkul oru nichchiyathaarththamae
Nigazhunthu vittatho
Ini soppanagalill
Ennai theda vendaam

Female : Viyaalan maalai varuvaen
Vizhikkor virunthai tharuvaen
Viyaalan maalai varuvaen
Vizhikkor virunthai tharuvaen

Female : Bharathi silaiyin oram
Edhirpaarththirungal anthi neram
Edhirpaarththirungal anthi neram

Male : Uppukkadal karpukkeda
Thoduvaanam theendum velaiyil
Uppukkadal karpukkeda
Thoduvaanam theendum velaiyil

Male : Maiyitta kannaal neeyum
Kaiyoppam Ittaai kannae
Thanimai sugangal muzhukka
Nee thavanai muraiyil kodukka

Male : Dhinamum dhinamum varuga
Thanalil mezhugaai uruga
Mudhumai varaiyil inimael
Intha padhumai adiyaen madiyil
Padhumai adiyaen madiyil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : வணக்கம்…..
முதல் வரியை எழுதும் முன்
என் முகவரியை எழுத எண்ணினேன்
பிறகு தான் வாழ்த்துகின்ற இதயத்துக்கு
விசாலம் தான் முக்கியமே தவிர
விலாசம் முக்கியமல்ல என்று விட்டு விட்டேன்

பெண் : புஷ்பங்கள் கைதட்டி கூப்பிடாமலயே
வண்டுகள் வருவது போல்
உந்தன் நடன அரங்கை நோக்கி நகர் தானாகவே
நகர்ந்து நகர்ந்து வருகிறது
காரணம் அபிநயம் என்று சொல்லை
நீங்கள் அதிசயம் என்று அர்த்தப்படுத்துகிறீர்கள்

பெண் : காற்றுக்கூட காற்சலங்கை கட்டி விடக்கூடிய
கெட்டிக்காரர் நீங்கள்
ஆண் : காற்றுக்கூட காற்சலங்கை கட்டி விடக்கூடிய
கெட்டிக்காரர் நீங்கள் அஹஹாஹ்ஹா

பெண் : உங்களை சிருஷ்டித்த கர்வத்தில்
கலைமகளே தலைகனத்து நிற்கிறாள்

பெண் : ஓஹோ புரிகிறது…………
ஒரு பைத்தியம் என்று என்னை பரிகசிக்கிறீர்களோ
ஆம் பைத்தியம் தான் பைத்தியம் தான்
நான் ஒரு தமிழ் பைத்தியம்
பின் குறிப்பு
விட்டு விட்டு வந்த என் இதயத்தை
விரைவில் திருப்பி அனுப்பவும்

ஆண் : படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
பேப்பர் அரங்கம் முழுதும்
உந்தன் பேனா முனையின் நடனம்
பேனா முனையின் நடனம்

ஆண் : உன் சித்திரம் கண் முற்றிலும்
வரைந்தாக வேண்டும் நேரில் வா
உன் சித்திரம் கண் முற்றிலும்
வரைந்தாக வேண்டும் நேரில் வா

ஆண் : சொப்னங்கள் உன்னைத்தேட
சுவாசங்கள் உஷ்ணம் ஏற
நினைக்கும் நினைப்பே கருக
நீ அணைக்கும் படையாய் வருக
அணைக்கும் படையாய் வருக

பெண் : என் சிநேகிதரே
உங்கள் எழுத்துக்களின் இனிப்பிற்கு
எறும்புகள் வரக்கூடும் என்பதால் கடிதத்தை
என் மார்சிறையில் மறைத்து வைத்திருக்கிறேன்
தபால்களையே தாம்பூலங்களாக கொண்டு

பெண் : நமக்குள் ஒரு நிச்சியதார்த்தமே
நிகழ்ந்து விட்டதோ
இனி சொப்பனங்களில்
என்னைத் தேட வேண்டாம்

பெண் : வியாழன் மாலை வருவேன்
விழிக்கோர் விருந்தை தருவேன்
வியாழன் மாலை வருவேன்
விழிக்கோர் விருந்தை தருவேன்

பெண் : பாரதி சிலையின் ஓரம்
எதிர்ப்பார்த்திருங்கள் அந்தி நேரம்
எதிர்ப்பார்த்திருங்கள் அந்தி நேரம்

ஆண் : உப்புக்கடல் கற்புக்கெட
தொடுவானம் தீண்டும் வேளையில்
உப்புக்கடல் கற்புக்கெட
தொடுவானம் தீண்டும் வேளையில்

ஆண் : மையிட்ட கண்ணால் நீயும்
கையொப்பம் இட்டாய் கண்ணே
தனிமை சுகங்கள் முழுக்க
நீ தவணை முறையில் கொடுக்க

ஆண் : தினமும் தினமும் வருக
தணலில் மெழுகாய் உருக
முதுமை வரையில் இனிமேல்
இந்த பதுமை அடியேன் மடியில்
பதுமை அடியேன் மடியில்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here