Vanangidum Kaikalil Song Lyrics is a track from Karpooram- Tamil Movie 1957, Starring A. V. M. Rajan, Srikanth, T. S. Balaiah, Cho Ramasamy, S. A. Ashokan, T. K. Balachandran, Pushpalatha, Manimala, T. P. Muthulakshmi and Manorama. This song was sung by Soolamangalam Rajalakshmi and P. Susheela, music composed by D. B. Ramachandran and lyrics written by Poovai Sengkuttuvan.

Singers : Soolamangalam Rajalakshmi and P. Susheela

Music Director : D. B. Ramachandran

Lyricist : Poovai Sengkuttuvan

Male : Thuthipporku valvinaipom thunbampom
Nenjil pathipporku selvam palithuk kathithongum
Nishtaiyum kaikoodum
Nimalar arul kanthar sashti kavacham thanai

Females : Vanangidum kaigalin vadivathai paarthaal
Vel pol irukkuthadi vel pol irukkuthadi

Female : Vel kondu nindravan thirumugam parthaal
Paal pol theriyudhadi paal pol theriyudhadi

Females : Vanangidum kaigalin vadivathai paarthaal
Vel pol irukkuthadi vel pol irukkuthadi

Female : Koovidum seval kodi mel irundhu
Vizhithida solluthadi
Koovidum seval kodi mel irundhu
Vizhithida solluthadi

Female : Vizhithathum ennai ninaithiru endru
Avan solvadhu theriyudhadi
Solvadhu theriyudhadi

Female : Kandhanin karunai mazhai varum
Endrae maamayil aaduthadi
Kandhanin karunai mazhai varum
Endrae maamayil aaduthadi

Female : Maamayil viritha thogaiyin kangal
Velanai theduthadi velanai theduthadi

Female : Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan
Muthamizh piranthadhadi
Mudhan mudhal iraivan thiruvaai thirandhaan
Muthamizh piranthadhadi

Female : Andha muthamizh inbam anaithilum murugan
Thirumugam thondruthadi thirumugam thondruthadi

Female : Eppodhu parthaalum
Sirithirukkum adhu aaru mugangaladi
Eppodhu parthaalum
Sirithirukkum adhu aaru mugangaladi

Female : Eppadi tholudhaalum arul kodukkum
Eppadi tholudhaalum arul kodukkum
Adhu panniru kaikaladi

Both : Panniru kaikaladi

பாடகர்கள் : சூலமங்கல ராஜலக்ஷ்மி மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன்

பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : துதிப்போர்க்கு வல்வினை போம்
துன்பம்போம்
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை…

பெண்கள் : வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி

பெண் : வேல் கொண்டு நின்றவன் திருமுகம் பார்த்தால்
பால் போல் தெரியுதடி பால் போல் தெரியுதடி

பெண்கள் : வணங்கிடும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால்
வேல் போல் இருக்குதடிவேல் போல் இருக்குதடி

பெண் : கூவிடும் சேவல் கொடி மேலிருந்து
விழித்திடச் சொல்லுதடி
கூவிடும் சேவல் கொடி மேலிருந்து
விழித்திடச் சொல்லுதடி

பெண் : விழித்ததும் என்னை நினைத்திரு என்று
அவன் சொல்வது தெரியுதடி
சொல்வது தெரியுதடி

பெண் : கந்தனின் கருணை மழை வரும்
என்றே மாமயில் ஆடுதடி
கந்தனின் கருணை மழை வரும்
என்றே மாமயில் ஆடுதடி

பெண் : மாமயில் விரித்த தோகையின் கண்கள்
வேலனைத் தேடுதடி வேலனைத் தேடுதடி

பெண் : முதன்முதல் இறைவன் திருவாய்
திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி
முதன்முதல் இறைவன் திருவாய்
திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி

பெண் : அந்த முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
திரு முகம் தோன்றுதடி திருமுகம் தோன்றுதடி

பெண் : எப்போது பார்த்தாலும்
சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி
எப்போது பார்த்தாலும்
சிரித்திருக்கும்அது ஆறு முகங்களடி

பெண் : எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும்
அது பன்னிரு கைகளடி
பெண்கள் : பன்னிரு கைகளடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here