Singers : P. Jayachandran, Vani Jairam and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Chorus : ……………

Male : Vanthae maatharam enbom…..
Engal maanila thaayai vananguthum enbom…

Male : Seppu mozhi padhinettudaiyaal
Enil sinthanai ondrudaiyaal
Seppu mozhi padhinettudaiyaal
Enil sinthanai ondrudaiyaal
Muppathu kodi mugam udaiyaal
Uyir moipura ondrudaiyaal

Female : Naan orr velli paniyil
Thulli thiriyum ponnu
Inikkum apple pazhamum
Engal mozhiyum onnu

Female : Kashmir mozhi roja sendu
Hassal ennum paadal undu
Kashmir mozhi roja sendu
Hassal ennum paadal undu

Female : Naan orr velli paniyil
Thulli thiriyum ponnu

Female : Senthamizh enbathu engal mozhi
Kural thaenmarai thantha mozhi
Senthamizh enbathu engal mozhi
Kural thaenmarai thantha mozhi
Vanthavar yaaraenum vaazhththum mozhi
Intha vaiyaththin mooththa mozhi

Male : ………………

Female : Vangaalam singam nethaji thantha perumai
Engal mozhiyai saarum
Ulagam pottrum kaviyarasar tagore
Oruvan pothum engal peyar solla
Engal peyar solla engal peyar solla…..

Male : ………………

Female : Kalangal engum konjum engal naadallo
Palaavum thaenum saerththu pesum pechchallo
Malaiyalam engal thaayin thaayallo
Ezhuththachchan vanthu achchaaram thanthallo
Munnae naangal pinnae cheran keralaraayallo
Munnae naangal pinnae cheran keralaraayallo

Female : Veeraththukku veeran thantha sivaji annai mozhi
Engal maraathth nejil inikkum maraaththi
Dhesam thannai kaakka vantha
Thilagan thantha mozhi adhuvum maraaththi
Endrum avarai ninainthu paaduvom aaduvom
Maenmaiyai pottruvom

Female : Nalla thaenil seitha osai
Engal telungu ennum paashai
Idhu godhavari theeram selvam kozhichchu vanthathaagum
Keerthanaiyin naadham ketkkum ennaalum
Keerthi konda engal annai mozhiyae

Female : Kannadam engal mozhi
Pala kaaviyam thantha mozhi
Aayiram aandagal aagiyum ilagiyam
Aayiram kanda mozhi engal anbukkuriya mozhi
Rahaventhira saamiyai kandathum thanthathum
Engalin thanga vayal endru paadadi nyaanakuyil

Female : Ondrupattaal undu vaazhvu
Nammil ottrumai neengil anaivarkkum thaazhvu

Chorus : Ondrupattaal undu vaazhvu
Nammil ottrumai neengil anaivarkkum thaazhvu
Ondrupattaal undu vaazhvu

பாடகர்கள் : ஜெயச்சந்திரன், வாணி ஜெய்ராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

குழு : ……………….

ஆண் : வந்தே மாதரம் என்போம்…………
எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

ஆண் : செப்பு மொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்
செப்பு மொழி பதினெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்
முப்பது கோடி முகம் உடையாள்
உயிர் மொய்புற ஒன்றுடையாள்

பெண் : நான் ஓர் வெள்ளி பனியில்
துள்ளி திரியும் பொண்ணு
இனிக்கும் ஆப்பிள் பழமும்
எங்கள் மொழியும் ஒன்னு

பெண் : காஷ்மீர் மொழி ரோஜாச் செண்டு
ஹஸல் என்னும் பாடல் உண்டு
காஷ்மீர் மொழி ரோஜாச் செண்டு
ஹஸல் என்னும் பாடல் உண்டு

பெண் : நான் ஓர் வெள்ளி பனியில்
துள்ளி திரியும் பொண்ணு

பெண் : செந்தமிழ் என்பது எங்கள் மொழி
குறள் தேன்மறை தந்த மொழி
செந்தமிழ் என்பது எங்கள் மொழி
குறள் தேன்மறை தந்த மொழி
வந்தவர் யாரேனும் வாழ்த்தும் மொழி
இந்த வையத்தின் மூத்த மொழி

ஆண் : ……………………….

பெண் : வங்காளம் சிங்கம் நேதாஜி தந்த பெருமை
எங்கள் மொழியை சாரும்
உலகம் போற்றும் கவியரசர் தாகூர்
ஒருவன் போதும் எங்கள் பெயர் சொல்ல
எங்கள் பெயர் சொல்ல எங்கள் பெயர் சொல்ல……

குழு : ……………………

பெண் : கலங்கள் எங்கும் கொஞ்சும் எங்கள் நாடல்லோ
பலாவும் தேனும் சேர்த்து பேசும் பேச்சல்லோ
மலையாளம் எங்கள் தாயின் தாயல்லோ
எழுத்தச்சன் வந்து அச்சரம் தந்தல்லோ
முன்னே நாங்கள் பின்னே சேரன் கேரளராயல்லோ
முன்னே நாங்கள் பின்னே சேரன் கேரளராயல்லோ

பெண் : வீரத்துக்கு வீரன் தந்த சிவாஜி அன்னை மொழி
எங்கள் மராத்தி நெஞ்சில் இனிக்கும் மராத்தி
தேசம் தன்னை காக்க வந்த
திலகன் தந்த மொழி அதுவும் மராத்தி
என்றும் அவரை நினைந்து பாடுவோம் ஆடுவோம்
மேன்மையை போற்றுவோம்

பெண் : நல்ல தேனில் செய்த ஓசை
எங்கள் தெலுங்கு என்னும் பாஷை
இது கோதாவரி தீரம் செல்வம் கொழிச்சு வந்ததாகும்
கீர்த்தனையின் நாதம் கேட்கும் எந்நாளும்
கீர்த்தி கொண்ட எங்கள் அன்னை மொழியே

பெண் : கன்னடம் எங்கள் மொழி
பல காவியம் தந்த மொழி
ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் இலக்கியம்
ஆயிரம் கண்ட மொழி எங்கள் அன்புக்குரிய மொழி
ராகவேந்திர சாமியை கண்டதும் தந்ததும்
எங்களின் தங்க வயல் என்று பாடடி ஞானக்குயில்

பெண் : ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

குழு : ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு
ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here