Singer : K. J. Yesudas

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Humming…..

Male : Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji

Male : Angamo thangaradham aaduvatho nooru vidham
Angamo thangaradham aaduvatho nooru vidham
Aadharamattra idai asaindhu varum naagapadam
Aadharamattra idai asaindhu varum naagapadam

Male : Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji

Male : Saaranga puruvam idhu sarasakala saalaiyidhu
Santhosam enbatharkkae thani vilakkam kooruvadhu
Saaranga puruvam idhu sarasakala saalaiyidhu
Santhosam enbatharkkae thani vilakkam kooruvadhu

Male : Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji

Male : Vaazhaikkal mandabathil
Vadithu vaitha kinnamidhu
Vaazhaikkal mandabathil
Vadithu vaitha kinnamidhu
Maanika siragil ennai
Maraithu kollum annamidhu

Male : Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji

Male : Kangalo naaval pazham
Kaniyidhazho kovaipazham
Kattodu naan anaikka
Kaaman thandha thangakudam
Kangalo naaval pazham
Kaniyidhazho kovaipazham
Kattodu naan anaikka
Kaaman thandha thangakudam

Male : Thendral thaan ivaludalai
Theendiyadhu idhu varaiyil
Thendral thaan ivaludalai
Theendiyadhu idhu varaiyil
Selaigal ival azhagai
Moodiyadhu adhu varaiyil

Male : Endru naan sooduvadho
Iniya malar manavaraiyil
Andru naan rasithiruppen
Aval azhagai thaniyaraiyil

Male : Vanji idhu vanji mayanguvathen anji
Valai kuunga varalo mazhalaiyilae konji
Vanji idhu vanji…haa..aa.hoo..oo.oo..lalalalala la la la…

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : முனங்கல்

ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி…….

ஆண் : அங்கமோ தங்கரதம் ஆடுவதோ நூறு விதம்
அங்கமோ தங்கரதம் ஆடுவதோ நூறு விதம்
ஆதாரமற்ற இடை அசைந்து வரும் நாகபடம்
ஆதாரமற்ற இடை அசைந்து வரும் நாகபடம்

ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி…..

ஆண் : சாரங்கப் புருவம் இது சரசகலா சாலையிது
சந்தோசம் என்பதற்கே தனி விளக்கம் கூறுவது
சாரங்கப் புருவம் இது சரசகலா சாலையிது
சந்தோசம் என்பதற்கே தனி விளக்கம் கூறுவது

ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி…..

ஆண் : வாழைக்கால் மண்டபத்தில்
வடித்து வைத்த கிண்ணமிது
வாழைக்கால் மண்டபத்தில்
வடித்து வைத்த கிண்ணமிது
மாணிக்கச் சிறகில் என்னை
மறைத்துக் கொள்ளும் அன்னமிது

ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி…..

ஆண் : கண்களோ நாவல் பழம்
கனியிதழோ கோவைப்பழம்
கட்டோடு நான் அணைக்க
காமன் தந்த தங்கக்குடம்
கண்களோ நாவல் பழம்
கனியிதழோ கோவைப்பழம்
கட்டோடு நான் அணைக்க
காமன் தந்த தங்கக்குடம்

ஆண் : தென்றல்தான் இவள் உடலைத்
தீண்டியது இதுவரையில்
தென்றல்தான் இவள் உடலைத்
தீண்டியது இதுவரையில்
சேலைகள் இவள் அழகை
மூடியது அதுவரையில்

ஆண் : என்று நான் சூடுவதோ
இனிய மலர் மணவறையில்
அன்று நான் ரசித்திருப்பேன்
அவள் அழகை தனியறையில்………

ஆண் : வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
வஞ்சி இது வஞ்சி…..
ஹா ..ஆ ..ஹோ ..ஊ…லாலாலாலாலா லாலா …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here