Singers : Ilayaraja and P. Susheela

Music by : Ilayaraja

Female : Vanna karunguzhal
Valli kuramagal
Velanai maalaiyittaal

Female : Vanna karunguzhal
Valli kuramagal
Velanai maalaiyittaal
{Andha punniya kaaviyam
Enni isaithida
Ennaiyum aanaiyittaal} (2)
Ennaiyum aanaiyittaal

Female : Nambi raajan thirumagalaana
Valliyin perunagai
Naaratha maamuni kandu
Muruganidam sendru (Dialogue)

Female : Kanden kani ondru kanden
Kanden kani ondru kanden
Vadivelanae sivabalanae
Un pannirandu karam
Unnukindra vidham
Kanden kani ondru kanden

Female : Azhagiya vizhi vannam
Mmm…mmm…mmm…mmm..
Azhagiya vizhi vannam
Mazhai nigar kuzhal vannam
Azhagiya vizhi vannam
Mazhai nigar kuzhal vannam
Unakkenavae piranthaal
Andha mada annam
Unakkenavae piranthaal
Andha mada annam
Kanden kani ondru kanden

Female : Valliyin vadivazhagai
Naarathan solla kettu
Velavan vedanaaga kolam poondaan
Maanai thedum baavanaiyil
Mangal ival irukkum thikku
Vanthu serndhaan

Female : Endha maan thedi vandha maan
Endru valli ketkka
Meyaadha maan pulli mevaadha maan
Meyaadha maan
Paayum nadai azhagum
Pinnal jadai azhagum
Paayum nadai azhagum
Pinnal jadai azhagum
Kann kavarum mugamum idhazhum
Pon sengakamalam enavae thigalum
Thanil andham migundhida
Vandhu piranthathu mei yaadha maan
Mei yaadha ..meiyaadha maan

Female : Avan sonna maan
Indha kanni maan
Endru kandu konda valli
Sinanthaal seerinaal

Female : Maanai thedi vantha vedaa
Adadaa mooda sari thaan poda
Un kallathanam enna vendru
Kann irandum kaattugaiyil
Ellathanai kallathanam ennidam sellumodaa
Oh maanai thedi
Ada maanai thedi vantha vedaa

Female : Udanae vedanaai iruntha velan
Vengaiyaai maari manavalliyai thodarnthu

Female : Aaviyae en aaruyir sanjeeviyae
Manmadhan ennum paaviyae
Malar kanaigal thooviyae
Vaaturaan kannae
Aayal oottum pennae pennae pennae

Female : Valli enna indha kaalathu
Modern girl ah
Seri endru odanae solla
Sorry endru maruthu vittaal
Vaaliba murugan odanae
Vayothigan aanaaan
Valli kudutha thinai maavai
Thindra andha thaathavirkku

Female : Vikkalum vanthathadi
Pennae vikkalum vanthathadi
Vikkalum vanthathadi
Pennae vikkalum vanthathadi
Sikkalil nirkkindra sundharan aanathaal
Kaadhal sikkalil nirkkindra
Sundharan aanathaal
Vikkalum vanthathadi
Pennae vikkalum vanthathadi

Female : Valli paarthaal
Adi aaththaa ivar pollatha thaathaa
Endru valli verukka
Aarumugan annan
Aanaimuganai azhaithaan
Valli bayanthu thirumanathirkku
Oppu kondaal
Yaanai velagi poittru

Female : Yechchi puttaenae thaatha
Yechchi puttaenae
Valli yechchi puttaenae
Thaatha yechchi puttaenae

Female : Marubadiyum yaanaiyai
murugan azhaikka
Adhu thunbikkaiyaal
Valliyai thooki poda
Aval murugaa murugaa murugaa
Endru alara
Valliyai murugan vaangi kondaan
Kaiyil thaangi kondaan
Manam pol muruganai
Valli mananthu kondaal

Female : Valliammai naadhannukkum
Pulli mayil velanukkum
kannanukkum
Palani malai mannanukkum
Mangalam subha mangalam
Mangalam subha mangalam

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : {வண்ணக் கருங்குழல்
வள்ளிக் குறமகள்
வேலனை மாலையிட்டாள்} (2)

பெண் : {அந்தப் புண்ணியக் காவியம்
எண்ணி இசைத்திட
என்னையும் ஆணையிட்டாள்} (2)
என்னையும் ஆணையிட்டாள்

பெண் : கண்டேன் கனியொன்று கண்டேன்
கண்டேன் கனியொன்று கண்டேன்
வடிவேலனே சிவபாலனே
உன் பன்னிரெண்டு கரம்
உண்ணுகின்ற விதம்
கண்டேன் கனியொன்று கண்டேன்

பெண் : அழகிய விழி வண்ணம்….
ஆஆஆஆ ஓஓஒ….
அழகிய விழி வண்ணம்….
மழைநிகர் குழல் வண்ணம்
அழகிய விழி வண்ணம்…
மழைநிகர் குழல் வண்ணம்

பெண் : உனக்கெனவே பிறந்தாள்
அந்த மட அன்னம்
உனக்கெனவே பிறந்தாள்
அந்த மட அன்னம்
கண்டேன் கனியொன்று கண்டேன்

பெண் : எந்த மான் தேடி வந்த மான்
மேயாத மான் புள்ளி மேவாத மான்
மேயாத மான்….

பெண் : பாயும் நடையழகும்
பின்னல் ஜடையழகும்
பாயும் நடையழகும்
பின்னல் ஜடையழகும்

பெண் : கண் கவரும் முகமும்
இதழும் பொன் செங்கமலம்
எனவே திகழும் தனில்
அந்தம் மிகுந்திட வந்து
பிறந்தது மேயாத
மேயாத மேயாத மான்

பெண் : மானைத் தேடி வந்த வேடா
அடடா மூடா சரி தான் போடா
உன் கள்ளத்தனம் என்னவென்று
கண்ணிரண்டும் காட்டுகையில்
எள்ளத்தனை கள்ளத்தனம்
என்னிடம் செல்லுமோடா அட
மானைத் தேடி வந்த வேடா

பெண் : ஆவியே என் ஆருயிர்
சஞ்ஜீவியே மன்மதன் என்னும்
பாவியே மலர்க் கணைகள்
தூவியே வாட்டுறான் கண்ணே
ஆயல் ஓட்டும் பெண்ணே
பெண்ணே பெண்ணே

பெண் : விக்கலும் வந்ததடி பெண்ணே
விக்கலும் வந்ததடி
சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால்
காதல் சிக்கலில் நிற்கின்ற சுந்தரன் ஆனதால்
விக்கலும் வந்ததடி பெண்ணே
விக்கலும் வந்ததடி

பெண் : ஏய்ச்சுப் புட்டேனே
தாத்தா ஏய்ச்சுப் புட்டேனே
வள்ளி ஏய்ச்சுப் புட்டேனே
தாத்தா ஏய்ச்சுப் புட்டேனே

பெண் : வள்ளியம்மை நாதனுக்கும்
புள்ளி மயில் வேலனுக்கும்
கண்ணனுக்கும்
பழனி மலை மன்னனுக்கும்
மங்களம் சுப மங்களம்
மங்களம் சுப மங்களம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here