Singer : T. S. Bhagavathy

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Female : Vanna maedaiyil ennam polavae
Vandhu nindravar yaaro
Manjal kungumam maalai sandhanam
Thandhu sendravar yaaro

Female : Vanna maedaiyil ennam polavae
Vandhu nindravar yaaro

Female : Kangal kaanum mun ilaiya nenjilae
Kanavu serndhavar yaaro
Kanindhu vandhaval ezhai enbathaal
Kadhavai moodi sendraaroo

Female : Kangal kaanum mun ilaiya nenjilae
Kanavu serndhavar yaaro
Kanindhu vandhaval ezhai enbathaal
Kadhavai moodi sendraaroo

Female : Vanna maedaiyil ennam polavae
Vandhu nindravar yaaro

Female : Ilamai naadiyil pudhiya vaarthaiyil
Isaiyai serkka mattaaya
Udhaya sooriyan kadhirgal polavae
Oliyai veesa maattaaya

Female : Ilamai naadiyil pudhiya vaarthaiyil
Isaiyai serkka mattaaya
Udhaya sooriyan kadhirgal polavae
Oliyai veesa maattaaya

Female : Vanna maedaiyil ennam polavae
Vandhu nindravar yaaro

Female : Thoongum kaadhalil thuvalum paavaiyin
Thuyilai neekka matttaayaa
Yengum ullamae idhaya naadhanai
Endrum kaana maattaayaa

Female : Thoongum kaadhalil thuvalum paavaiyin
Thuyilai neekka matttaayaa
Yengum ullamae idhaya naadhanai
Endrum kaana maattaayaa

Female : Vanna maedaiyil ennam polavae
Vandhu nindravar yaaro
Manjal kungumam maalai sandhanam
Thandhu sendravar yaaro

பாடகி : டி. எஸ். பகவதி

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே
வந்து நின்றவர் யாரோ
மஞ்சள் குங்குமம் மாலை சந்தனம்
தந்து சென்றவர் யாரோ…….

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே
வந்து நின்றவர் யாரோ

பெண் : கண்கள் காணும் முன் இளைய நெஞ்சிலே
கனவு சேர்த்தவர் யாரோ
கனிந்து வந்தவள் ஏழை என்பதால்
கதவை மூடிச் சென்றாரோ

பெண் : கண்கள் காணும் முன் இளைய நெஞ்சிலே
கனவு சேர்த்தவர் யாரோ
கனிந்து வந்தவள் ஏழை என்பதால்
கதவை மூடிச் சென்றாரோ

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே
வந்து நின்றவர் யாரோ

பெண் : இளமை நாடியில் புதிய வார்த்தையில்
இசையைச் சேர்க்க மாட்டாயா
உதயசூரியன் கதிர்கள் போலவே
ஒளியை வீச மாட்டாயா…..

பெண் : இளமை நாடியில் புதிய வார்த்தையில்
இசையைச் சேர்க்க மாட்டாயா
உதயசூரியன் கதிர்கள் போலவே
ஒளியை வீச மாட்டாயா…..

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே
வந்து நின்றவர் யாரோ

பெண் : தூங்கும் காதலில் துவளும் பாவையின்
துயிலை நீக்க மாட்டாயா
ஏங்கும் உள்ளமே இதய நாதனை
என்றும் காண மாட்டாயா…….

பெண் : தூங்கும் காதலில் துவளும் பாவையின்
துயிலை நீக்க மாட்டாயா
ஏங்கும் உள்ளமே இதய நாதனை
என்றும் காண மாட்டாயா…….

பெண் : வண்ண மேடையில் எண்ணம் போலவே
வந்து நின்றவர் யாரோ
மஞ்சள் குங்குமம் மாலை சந்தனம்
தந்து சென்றவர் யாரோ…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here