Singers : Gopal Rao and Chorus

Music by : Vidyasagar

Female : Aaaa…..aaa….aaa….

Chorus : Vannakili soozh konda
Chinna kili varuga
Vannakili soozh konda
Chinna kili varuga

Chorus : Vayittrukkul valarkindra
Valar piraiyae varuga
Boomikku varungindra
Puthu malarae varuga
Poovukkul valarkindra
Puthayalae varuga

Chorus : Uyirukku uyirthantha
Uththamiyae varuga
Payirukku paal vaarkkum
Pournamiyae varuga

Chorus : Vannakili soozh konda
Chinna kili varuga
Vayittrukkul valarkindra
Valar piraiyae varuga
Boomikku varungindra
Puthu malarae varuga

Chorus : Vinmeenai manamootti
Poovaakkungal
Vetri magal koonthalukku
Poochchoodungal
Minnal saram eduthu
Valai seiyungal
Min iyanaal kai irandil
Valai soodungal

Male : Vidi velli ezhugaiyilae
Vennilavu vizhugirathu
Puthu vellam varugaiyilae
Pazhan thanneer kazhikirathu

Male : Puthu pookkal malargaiyilae
Saragellaam uthirgirathu
Ithu puriyaatha varaikkumthaan
Nimmathiyae irukkirathu

Female : Aaah…aaaaa…..aaa…..
Aaaah….aaaa…..aaa……

Male : Aaah…aaaaa…..aaa…..
Aaaah….aaaa…..aaa……
Aaaah….aaaa…..aaa……

Male : Kaattru varum neram ethu
Kumizhukku therivathillai
Kanner varum neram ethu
Kangalukku therivathillai

Male : Poo uthirum neram ethu
Aaaan chedi kodigal arivathillai
Athai arinthu kondaal
Amaithi illai
Ariyum varai avathi illai

பாடகர்கள் : கோபால் ராவ்
மற்றும் குழு

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆ…ஆ……ஆ…..

குழு : வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக
வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக

குழு : வயிற்றுக்குள் வளர்கின்ற
வளர் பிறையே வருக
பூமிக்கு வருகின்ற
புது மலரே வருக
பூவுக்குள் வளர்கின்ற
புதையலே வருக

குழு : உயிருக்கு உயிர்தந்த
உத்தமியே வருக
பயிருக்கு பால் வார்க்கும்
பௌர்ணமியே வருக

குழு : வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக
வயிற்றுக்குள் வளர்கின்ற
வளர் பிறையே வருக
பூமிக்கு வருகின்ற
புது மலரே வருக

குழு : விண்மீனை மணமூட்டி
பூவாக்குங்கள்
வெற்றி மகள் கூந்தலுக்கு
பூச்சூடுங்கள்
மின்னல் சரம் எடுத்து
வலை செய்யுங்கள்
மின்னியலால் கை இரண்டில்
வலை சூடுங்கள்

ஆண் : விடி வெள்ளி எழுகையிலே
வெண்ணிலவு விழுகிறது
புது வெள்ளம் வருகையிலே
பழந் தண்ணீர் கழிகிறது

ஆண் : புது பூக்கள் மலர்கையிலே
சர்கெல்லாம் உதிர்கிறது
இது புரியாத வரைக்கும்தான்
நிம்மதியே இருக்கிறது

பெண் : ஆ…ஆ……ஆ…..
ஆ…..ஆ…..ஆ…..

ஆண் : ஆ……ஆ……ஆ…
ஆ…..ஆ…..ஆ…..
ஆ…ஆ……ஆ…..

ஆண் : காற்று வரும் நேரம் எது
குமிழுக்கு தெரிவதில்லை
கண்ணீர் வரும் நேரம் எது
கண்களுக்கு தெரிவதில்லை

ஆண் : பூ உதிரும் நேரம் எது
ஆ…. செடி கொடிகள் அறிவதில்லை
அதை அறிந்து கொண்டால்
அமைதி இல்லை
அறியும் வரை அவதி இல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here