Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Female : Vannam intha vanjiyin vannam
Nee virumpiya vannam
Nenjil arumbiya vannam
Nee vendiya vannam
Naan vazhangida innum
Oraayiram aayiram vannam
Vannam….vannam….vannam…vannam
Male : Vannam intha vanjiyin vannam
Nee virumpiya vannam
Nenjil arumbiya vannam
Nee vendiya vannam
Naan vazhangida innum
Oraayiram aayiram vannam
Vannam….vannam….vannam…vannam
Chorus : ………….
Male : Karuneela thiraatchaigal thaano
Kannae un kangalin vannam
Kaarkaala megangal thaano
Kalaiyaatha koondhalin vannam
Chorus : ………….
Female : Vizhi meedhu ovvoru naalum
Anbae un karpanai vannam
Neethaanae nenjinil irunthae
Neengaatha kaaviya vannam
Male : Mangai ennum thangakkinnam mella nadakka
Munnum pinnum vannangalai vaari iraikka
Ammammaa oo mannan vanthaan alli edukka
Alli konda pinnum ingu michcham irukka
Female : Vannam….vannam….vannam…
Male : Vannam intha vanjiyin vannam
Naan virumbiya vannam
Nenjil arumbiya vannam
Chorus : ………….
Male : Athikaalai sooriyan polae
Sivappo un thaenidhazh vannam
Adadaa en kaivasam kandaen
Azhagaana devathai vannam
Chorus : ………….
Female : Piriyaathu raththiri neram
Madi meedhu thunjiya vannam
Uravaada yaenguthu ingae
Unakkaaga thogaiyin vannam
Male : Anji anji pinnum nadai thendral vannamo
Mannil vanthu thaththi sellum minnal vannamo
Female : Mannan konda ullam enna mullai vannamo
Mella pongum paalai pola vellai vannamo
Male : Vannam….vannam….vannam…
Female : Vannam intha vanjiyin vannam
Naan virumbiya vannam
Nenjil arumbiya vannam….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ வேண்டிய வண்ணம்
நான் வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்…..வண்ணம்…..வண்ணம்….வண்ணம்…..
ஆண் : வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நான் வேண்டிய வண்ணம்
நீ வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்…..வண்ணம்…..வண்ணம்….வண்ணம்…..
குழு : …………………….
ஆண் : கருநீல திராட்சைகள் தானோ
கண்ணே உன் கண்களின் வண்ணம்
கார்கால மேகங்கள் தானோ
கலையாத கூந்தலின் வண்ணம்
குழு : …………………….
பெண் : விழி மீது ஒவ்வொரு நாளும்
அன்பே உன் கற்பனை வண்ணம்
நீ தானே நெஞ்சினில் இருந்தே
நீங்காத காவிய வண்ணம்
ஆண் : மங்கை என்னும் தங்கக்கிண்ணம் மெல்ல நடக்க
முன்னும் பின்னும் வண்ணங்களை வாரி இறைக்க
அம்மம்மா ஒ மன்னன் வந்தான் அள்ளி எடுக்க
அள்ளிக் கொண்ட பின்னும் இங்கு மிச்சம் இருக்க
பெண் : வண்ணம்…..வண்ணம்…..வண்ணம்….
ஆண் : வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
குழு : …………………….
ஆண் : அதிகாலை சூரியன் போலே
சிவப்போ உன் தேனிதழ் வண்ணம்
அடடா என் கைவசம் கண்டேன்
அழகான தேவதை வண்ணம்
குழு : …………………….
பெண் : பிரியாது ராத்திரி நேரம்
மடி மீது துஞ்சிய வண்ணம்
உறவாட ஏங்குது இங்கே
உனக்காக தோகையின் வண்ணம்
ஆண் : அஞ்சி அஞ்சி பின்னும் நடை தென்றல் வண்ணமோ
மண்ணில் வந்து தத்திச் செல்லும் மின்னல் வண்ணமோ
பெண் : மன்னன் கொண்ட உள்ளம் என்ன முல்லை வண்ணமோ
மெல்லப் பொங்கும் பாலைப் போல வெள்ளை வண்ணமோ
ஆண் : வண்ணம்…..வண்ணம்…..வண்ணம்….
பெண் : வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்……