Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Vanthaalum vanthaandi raja
Avan vantha pinnae naanum kooda raja
Munnooru naalaana pinnae
En muththu pillai thulli vizhum munnae

Male : Vanthaalum vanthaandi raja
Avan vantha pinnae naanum kooda raja
Munnooru naalaana pinnae
En muththu pillai thulli vizhum munnae

Male : Maganum vanthu mazhalai solli
Madiyil utkaarnthu mella
Maganum vanthu mazhalai solli
Madiyil utkaarnthu mella
Appa naanum unnai polae
Veeranthaanendru solla

Male : Naan alluvaen killuvaen
Aaduvaen paaduvaen ullam thulla
En kolgaiyai solvaen
Kobaththai thoonduvaen pagaiyai vella

Male : Vanthaalum vanthaandi raja
Avan vantha pinnae naanum kooda raja
Munnooru naalaana pinnae
En muththu pillai thulli vizhum munnae

Female : Kobaththil vanthathu sontham kannaa
Sonthaththil yaenintha kobam kannaa
Kobaththil vanthathu sontham kannaa
Sonthaththil yaenintha kobam kannaa

Female : Endrenthan pillaikku naan solvaen
Thanthaiyin kobaththai naan velluvaen
Endrenthan pillaikku naan solvaen
Thanthaiyin kobaththai naan velluvaen

Female : Nee rendum rendum naalu
Endru solvaai kannaa
Antha rendil ondru ponaal
Inbam undo kannaa

Male : Vanthaalum vanthaandi raja
Avan vantha pinnae naanum kooda raja
Munnooru naalaana pinnae
En muththu pillai thulli vizhum munnae

Male : Pirantha veedu puguntha veedu
Irandil un aasai engae
Appa ingae thaththaa angae
Pillaiyin ennangal engae

Male : Naan nallathu kettathu sonnathai
Seipavan enthan kannu
Adhai thanthavan naanadi kondaval
Neeyadi konjam nillu

Female : Paaloottum velaiyil paadam solvaen
Thaalaattum velaiyil needhi solvaen
Nooththukku thonnooru ammaa ullam
Aaththukkum melodum anbu vellam

Female : Avan ammaa pola
Nalla ammaa illai enbaan
En appaakkooda thappaa pogam koodaathenbaan

Male : Vanthaalum vanthaandi raja
Female : Avan vantha pinnae naanum kooda raja
Male : Munnooru naalaana pinnae
Female : En muththu pillai thulli vizhum munnae

Male : ……………….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசிலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வந்தாலும் வந்தான்டி ராஜா
அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
முந்நூறு நாளான பின்னே
என் முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே

ஆண் : வந்தாலும் வந்தான்டி ராஜா
அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
முந்நூறு நாளான பின்னே என்
முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே

ஆண் : மகனும் வந்து மழலைச் சொல்லி
மடியில் உட்கார்ந்து மெல்ல
மகனும் வந்து மழலைச் சொல்லி
மடியில் உட்கார்ந்து மெல்ல
அப்பா நானும் உன்னைப் போலே
வீரன்தானென்று சொல்ல

ஆண் : நான் அள்ளுவேன் கிள்ளுவேன்
ஆடுவேன் பாடுவேன் உள்ளம் துள்ள
என் கொள்கையை சொல்வேன்
கோபத்தை தூண்டுவேன் பகையை வெல்ல

ஆண் : வந்தாலும் வந்தான்டி ராஜா
அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
முந்நூறு நாளான பின்னே என்
முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே

பெண் : கோபத்தில் வந்தது சொந்தம் கண்ணா
சொந்தத்தில் ஏனிந்த கோபம் கண்ணா
கோபத்தில் வந்தது சொந்தம் கண்ணா
சொந்தத்தில் ஏனிந்த கோபம் கண்ணா

பெண் : என்றெந்தன் பிள்ளைக்கு நான் சொல்வேன்
தந்தையின் கோபத்தை நான் வெல்லுவேன்
என்றெந்தன் பிள்ளைக்கு நான் சொல்வேன்
தந்தையின் கோபத்தை நான் வெல்லுவேன்

பெண் : நீ ரெண்டும் ரெண்டும் நாலு
என்று சொல்வாய் கண்ணா
அந்த ரெண்டில் ஒன்று போனால்
இன்பம் உண்டோ கண்ணா

ஆண் : வந்தாலும் வந்தான்டி ராஜா
அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
முந்நூறு நாளான பின்னே என்
முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே

ஆண் : பிறந்த வீடு புகுந்த வீடு
இரண்டில் உன் ஆசை எங்கே
அப்பா இங்கே தாத்தா அங்கே
பிள்ளையின் எண்ணங்கள் எங்கே

ஆண் : நான் நல்லது கெட்டது சொன்னதை
செய்பவன் எந்தன் கண்ணு
அதை தந்தவன் நானடி கொண்டவள்
நீயடி கொஞ்சம் நில்லு

பெண் : பாலூட்டும் வேளையில் பாடம் சொல்வேன்
தாலாட்டும் வேளையில் நீதி சொல்வேன்
நூத்துக்கு தொண்ணூறு அம்மா உள்ளம்
ஆத்துக்கும் மேலோடும் அன்பு வெள்ளம்

பெண் : அவன் அம்மா போல நல்ல
அம்மா இல்லை என்பான் என்
அப்பாக்கூட தப்பாப் போக கூடாதென்பான்

ஆண் : வந்தாலும் வந்தான்டி ராஜா
பெண் : அவன் வந்த பின்னே நானும் கூட ராஜா
ஆண் : முந்நூறு நாளான பின்னே
பெண் : என் முத்துப் பிள்ளை துள்ளி விழும் முன்னே

ஆண் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here