Singer : S. Janaki

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Female : Vellaiyudai maattrivittu
Veroruvan kaipidiththu
Vanna nira pattuduththi
Venthathenna vinthaiyadi

Female : Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi

Female : Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi

Female : Kaarthigai ponaal
Pin maargazhi maatham
Orr thunai ponaal
Pin orr thunai vendum

Female : Oruththikku oruvan
Ennadi vaatham
Unmaiyai sonnaal
Yedhadi paavam

Female : Ramanum illai angae
Seedhaiyum illai ingae
Ramanum illai angae
Seedhaiyum illai ingae
Bathil solladi
Malarodu manjal yaedhadi

Female : Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi

Female : Madhavi pinnae
Nam kovalan ponaan
Kovalan thaanae
Pin kaaviyamaanaan

Female : Neruppinai polae
Mogamum vaattum
Anaiththidum kaiththaan
Aaruthal kaattum

Female : Sooriyan ponaal enna
Chanthiran vaanil undu
Sooriyan ponaal enna
Chanthiran vaanil undu
Badhil solladi
Malarodu manjal yaedhadi

Female : Varavendum rani ennai paaradi
Ingae konjam thunaiyodu
Vanthathenna kooradi enna sontham
Badhil solladi
Malarodu manjal yaedhadi….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : வெள்ளையுடை மாற்றி விட்டு
வேறொருவன் கைப்பிடித்து
வண்ண நிற பட்டுடுத்தி
வந்ததென்ன விந்தையடி……

பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி….

பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி….

பெண் : கார்த்திகை போனால்
பின் மார்கழி மாதம்
ஓர் துணை போனால்
பின் ஓர் துணை வேண்டும்

பெண் : ஒருத்திக்கு ஒருவன்
என்னடி வாதம்
உண்மையை சொன்னால்
ஏதடி பாவம்

பெண் : ராமனும் இல்லை அங்கே
சீதையும் இல்லை இங்கே
ராமனும் இல்லை அங்கே
சீதையும் இல்லை இங்கே
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி….

பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி….

பெண் : மாதவி பின்னே
நம் கோவலன் போனான்
கோவலன் தானே
பின் காவியமானான்

பெண் : நெருப்பினை போலே
மோகமும் வாட்டும்
அணைத்திடும் கைத்தான்
ஆறுதல் காட்டும்..

பெண் : சூரியன் போனால் என்ன
சந்திரன் வானில் உண்டு
சூரியன் போனால் என்ன
சந்திரன் வானில் உண்டு
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி…

பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி
இங்கே கொஞ்சம் துணையோடு
வந்ததென்ன கூறடி என்ன சொந்தம்
பதில் சொல்லடி
மலரோடு மஞ்சள் ஏதடி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here