Singers : Jikki and Chorus

Music by : S. M. Subbaiah Naidu

Both : Varuga varuga vaendhae…
Varuga varuga vaendhae…
Engal thalaiyaana kalai njaanam
Thanai pottrum thalaivaa nee

Both : Varuga varuga vaendhae…

Female : Veeram urangaadha thennaadu thanaiyaalum
Vaendhae…nee varugavae

Female : Paar pughazhum udhaya sooriyanae

Both : Paar pughazhum udhaya sooriyanae
Pasi indri puvi kaakkum paarthibanae
Varuga varugavae…

Both : Muthamizhum naavil payiraagumae
Thamizh mozhiyae unadhu uyiraagumae
Muthamizhum naavil payiraagumae
Thamizh mozhiyae unadhu uyiraagumae
Ethisaiyum vettri kondavanae
Eendhu eendhu karam sivandhavanae

Both : Varuga varuga vaendhae…

Both : Vael varugavae veera vaal varugavae
Vinnai thodum nin perumai varugavae

Both : Vinnai thodum nin perumai varugavae
Vaagai maalai tharum maamanam varugavae

Female : Malai meedhu thondrum muzhu nilavu pola…
Aa…aa….aa…aa…aa…aa…aa….a…

Both : Malai meedhu thondrum muzhu nilavu pola
Yaanai thalai meedhu ven kudai
Pidikkum thalaivanae

Both : Varuga varuga vaendhae endrum
Inidhaana dhraavida poongaavil malarndha
Vaendhae nee varugavae
Varuga varuga vaendhae…

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

இருவர் : வருக வருக வேந்தே…
வருக வருக வேந்தே…
எங்கள் தலையான கலை ஞானம்
தனைப் போற்றும் தலைவா நீ

இருவர் : வருக வருக வேந்தே…

பெண் : வீரம் உறங்காத தென்னாடு தனையாளும்
வேந்தே நீ வருகவே

பெண் : பார் புகழும் உதய சூரியனே

இருவர் : பார் புகழும் உதய சூரியனே
பசியின்றி புவி காக்கும் பார்த்திபனே
வருக வருகவே…

இருவர் : முத்தமிழும் நாவில் பயிராகுமே
தமிழ் மொழியே உனது உயிராகுமே
முத்தமிழும் நாவில் பயிராகுமே
தமிழ் மொழியே உனது உயிராகுமே
எத்திசையும் வெற்றி கொண்டவனே
ஈந்து ஈந்து கரம் சிவந்தவனே

இருவர் : வருக வருக வேந்தே…

இருவர் : வேல் வருகவே வீர வாள் வருகவே
விண்ணைத் தொடும் நின்
பெருமை வருகவே

இருவர் : விண்ணைத் தொடும் நின் பெருமை வருகவே
வாகை மாலை தரும் மாமணம் வருகவே

பெண் : மலை மீது தோன்றும் முழு நிலவு போல…
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ..ஆ…

இருவர் : மலை மீது தோன்றும் முழு நிலவு போலே
யானை தலை மீது வெண் குடை
பிடிக்கும் தலைவனே

இருவர் : வருக வருக வேந்தே என்றும்
இனிதாக திராவிடப் பூங்காவில் மலர்ந்த
வேந்தே நீ வருகவே
வருக வருக வேந்தே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here