Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa
Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa
Poovum poovum onnu kalanthathu ippothu
Thaenum paalum pongi vazhiyuthu ippothu

Female : Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna
Nesaththilae emmanasa thachchathenna thachchathenna

Female : Pirichcha pothum piriyavillaiyae sontham naanae
Vazhiyai marantha kuyilum saernthathu
Male : Aa…aa….kolam pottu jaadai sonnathu kanni maanae
Kodu namakku yaaru pottathu

Female : Nenjukkulla nenja vachchu ullathellaam kandukitten
Neththiyila pottu vachchu ungalaththaan thottukitten
Male : Naanum neeyum onnaa saerthaa naalum naalum santhosham
Female : Ragam thaalam saerum neram aanantham paadum sangeetham

Female : Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna
Female : Nesaththilae emmanasa thachchathenna thachchathenna

Female : ……………

Male : Meendum meendum koodi seruthu ponni aaru
Mogaththodu koodi paaduthu
Female : Aa….aa….kettu kettu kiranga thonuthu unga paattu
Kelvi pola ennai vaattuthu

Male : Aaththu vellam mettai vittu pallaththukkum odi varum
Aasaiyithu thedikkittu ananthamaai paadi varum
Female : Yaedho onnai solli solli
Ennai ippo killaathae
Pothum pothum kannaal ennai
Katti izhukkira shenbagamae….

Male : Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa
Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa
Poovum poovum onnu kalanthathu ippothu
Thaenum paalum pongi vazhiyuthu ippothu

Female : Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna
Nesaththilae emmanasa thachchathenna thachchathenna

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது

பெண் : வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன…..

பெண் : பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழியை மறந்த குயிலும் சேர்ந்தது
ஆண் : ஆ…ஆ….கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னி மானே
கோடு நமக்கு யாரு போட்டது

பெண் : நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்
நெத்தியில பொட்டு வச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்
ஆண் : நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம்
பெண் : ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்

ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
பெண் : நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன

பெண் : ………………………

ஆண் : மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
மோகத்தோடு கூடிப் பாடுது
பெண் : ஆ…ஆ….கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது உங்க பாட்டு
கேள்வி போல என்னை வாட்டுது

ஆண் : ஆத்து வெள்ளம் மேட்டை விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய்ப் பாடி வரும்
பெண் : ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி
என்னை இப்போ கிள்ளாதே
போதும் போதும் கண்ணால் என்னைக்
கட்டி இழுக்கிற செண்பகமே………

பெண் : வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன…..
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது

ஆண் : வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here