Singers : Jayachandran and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Male : {Vasantha kaala nathigalilae
Vairamani neeralaigal} (2)
{Neeralaigal meethinilae
Nenjirendin ninaivalaigal} (2)
Female : {Ninaivalaigal thodarndhu vanthaal
Neramellaam kanavalaigal} (2)
{Kanavalaigal valarvatharku
Kaamanavan malarkanaigal} (2)
Female : Ninaivalaigal thodarndhu vanthaal
Neramellaam kanavalaigal
Kanavalaigal valarvatharku
Kaamanavan malarkanaigal
Male : {Malarkanaigal paainthu vittaal
Madi irandum panjanaigal} (2)
Panjanaiyil palli kondaal
Manamirandum thalaiyanaigal
Male : Vasantha kaala nathigalilae
Vairamani neeralaigal
Neeralaigal meethinilae
Nenjirendin ninaivalaigal
Female : Ahaa….aaa….aaa…..
Ahaa…aaa….aaa….
Female : {Thalaiyanaiyil mugam puthaithu
Sarasamidum pudhu kalaigal} (2)
Pudhukalaigal peruvatharku
Poomalai manavinaigal
Oh poomaalai manavinaigal
Male : Manavinaigal yaarudano
Maayavanin vithi vagaigal
Manavinaigal yaarudano
Maayavanin vithi vagaigal
Vithi vagaiyai mudivu seiyum
Vasantha kaala neralaigal
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும்
வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : {வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்} (2)
{நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2)
பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்} (2)
{கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்} (2)
பெண் : நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்
ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள்} (2)
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால்
மனம் இரண்டும் தலை அணைகள்
ஆண் : வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்
பெண் : ………………………………………………..
பெண் : {தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள்} (2)
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மனவினைகள்
ஓ பூமாலை மனவினைகள்
ஆண் : {மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்} (2)
விதி வகையை முடிவு செய்யும்
வசந்த கால நேர் அலைகள்