Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Vasanthangal varum munbae veyil vanthathae
Mazhaikaala megangal kalaigindrathey
Vasanthangal varum munbae veyil vanthathae
Mazhaikaala megangal kalaigindrathey
Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai

Female : Ilai undu malar undu kani illaiyae
Kani ondru kai vanthu kiliyillaiyae
Aval veenai tharum paadal orae raagamae
Anantham adhil illai orae sogamae

Female : Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai

Female : Kavi ondru varumendru yaedaanaval
Sila naalil verum thaalil kodaanaval
Pani kaalam kuyil paada koodaanaval
Padikkaamal mudikindra paattaanaval

Female : Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai

Female : Mana chinnam kazhuththodu sirikkindrathae
Malar kinnam nerupaaga kodhikkindrathae
Ninaikkindra manam mattum ninaikkindrathae
Thadukkindra vidhi yaedho thadukindrathae

Female : Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai
Vasanthangal varum munbae veyil vanthathae
Mazhaikaala megangal kalaigindrathey
Aaaaa…..aaa…..aaa……aaa…..aaa…….ooo…..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை

பெண் : இலை உண்டு மலர் உண்டு கனி இல்லையே
கனி ஒன்று கை வந்தும் கிளியில்லையே
அவள் வீணை தரும் பாடல் ஒரே ராகமே
ஆனந்தம் அதில் இல்லை ஒரே சோகமே

பெண் : பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை

பெண் : கவி ஒன்று வருமென்று ஏடானவள்
சில நாளில் வெறும் தாளில் கோடானவள்
பனிக் காலம் குயில் பாட கூடானவள்
படிக்காமல் முடிகின்ற பாட்டானவள்

பெண் : பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை

பெண் : மணச் சின்னம் கழுத்தோடு சிரிக்கின்றதே
மலர்க் கிண்ணம் நெருப்பாக கொதிக்கின்றதே
நினைக்கின்ற மனம் மட்டும் நினைக்கின்றதே
தடுக்கின்ற விதி ஏதோ தடுக்கின்றதே

பெண் : பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
ஆஆஆ….ஆஆ……ஆஆ…..ஆஆ….ஆஆஆ…ஓஓஒ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here