Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Velaalae vizhigal
Indru aalolam isaikkum
Siru noolaalae idaiyil
Manmathan senaigal manthiram paadidum
Manmathan senaigal manthiram paadidum

Female : Aa….aa…aa….aa…aa…aa….
Neerodu thaanaadum
Thaerodum thirunaal engae
Neerodu thaanaadum
Thaerodum thirunaal engae

Female : Malligai thaamarai thullidum melliya
Poopondra mangai ingae…aaaa……
Poopondra mangai ingae…
Manmathan saenaigal manthiram paadidum
Male : Manmathan saenaigal manthiram paadidum

Male : Velaalae vizhigal
Indru aalolam isaikkum

Male : Pattu selaiyil
Minnum ponnizhai
Paavai maeniyil aadum
Thottu thaavida thullum en manam
Kattu kaavaalai meerum

Female : Aa….aa….aa…aa…aa….
Kattum kai valai
Thottum mellisai
Mottum unnudan odum
Chittu kangalil vettum minnalum
Pattam pol vilaiyaadum

Male : Poovanna koondhal
En manjamaanaal
Poovanna koondhal
En manjamaanaal
Naan konjam paada nee konjam paada
Male : Manmathan saenaigal manthiram paadidum
Female : Manmathan saenaigal manthiram paadidum

Male : Velaalae vizhigal
Indru aalolam isaikkum

Female : Thanga sengani angam unnudan
Sangamam aavathu endru
Thingal mangaiyin sevvaai unnudan
Pongum naadagam endru

Male : Aa….aa…aa…aa…aa…
Thiththikkum oru muththu poochcharam
Thaththaikkae tharavendru
Siththam sonnathu vegam vanthathu
Niththam aayiram undu

Female : Paadungal innum
Thaalangal thullum
Paadungal innum
Thaalangal thullum
Koodungal endro pennullam sollum
Female : Manmathan saenaigal manthiram paadidum
Male : Manmathan saenaigal manthiram paadidum

Both : Velaalae vizhigal
Indru aalolam isaikkum
Male : Siru noolaalae idaiyil
Both : Manmathan saenaigal manthiram paadidum

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ…..ஆ….
நீரோடு தானாடும்
தேரோடும் திருநாள் எங்கே
நீரோடு தானாடும்
தேரோடும் திருநாள் எங்கே

பெண் : மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய
பூப்போன்ற மங்கை இங்கே ..ஆஆஆ…
பூப்போன்ற மங்கை இங்கே
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

பெண் : வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்

ஆண் : பட்டுச் சேலையில்
மின்னும் பொன்னிழை
பாவை மேனியில் ஆடும்
தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம்
கட்டுக் காவலை மீறும்

பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….
கட்டும் கை வளை
தொட்டும் மெல்லிசை
மொட்டும் உன்னுடன் ஓடும்
சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும்
பட்டம் போல் விளையாடும்

ஆண் : பூவண்ணக் கூந்தல்
என் மஞ்சமானால்
பூவண்ணக் கூந்தல்
என் மஞ்சமானால்
நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட
ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
பெண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

ஆண் : வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்

பெண் : தங்கச் செங்கனி அங்கம் உன்னுடன்
சங்கமம் ஆவது என்று
திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன்
பொங்கும் நாடகம் என்று

ஆண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….
தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம்
தத்தைக்கே தரவென்று
சித்தம் சொன்னது வேகம் வந்தது
நித்தம் ஆயிரம் உண்டு

பெண் : பாடுங்கள் இன்னும்
தாளங்கள் துள்ளும்
பாடுங்கள் இன்னும்
தாளங்கள் துள்ளும்
கூடுங்கள் என்றோ பெண்ணுள்ளம் சொல்லும்
பெண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

இருவர் : வேலாலே விழிகள்
இன்று ஆலோலம் இசைக்கும்
ஆண் : சிறு நூலாலே இடையில்
இருவர் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here