Singer : Vani Jayaram

Music by : K. V. Mahadevan

Female : Alaiyaadum sendhooril aangaara moorthiyaai
Soorasamhaaram purindhaai
Andha aavesam thaniyavae thandhai arul vendiyae
Thirumurugan poondi vandhaai
En thaayum thandhaiyum neeyallavaa
Un pillai kurai theerthiduvaai …..vadivelavaa

Female : Velavanae murugaa un kaaladiyae saranam
Velavanae murugaa un kaaladiyae saranam
Veru thunai yaarumillai venduthalai kelaayoo
Velavanae murugaa un kaaladiyae saranam
Veru thunai yaarumillai venduthalai kelaayoo
Velavanae murugaa un kaaladiyae saranam

Female : Eeraaru vizhigalilae eppodhum arul surakkum
Ennaasai kanmanikku eppodhu ozhi pirakkum
Eeraaru vizhigalilae eppodhum arul surakkum
Ennaasai kanmanikku eppodhu ozhi pirakkum

Female : Pettravargal seidha pizhai pillaigalai seruvadhoo
Pettravargal seidha pizhai pillaigalai seruvadhoo
Kuttramae aanaalum kurai theerkka koodathaa
Velavanae murugaa un kaaladiyae saranam
Veru thunai yaarumillai venduthalai kelaayoo
Velavanae murugaa un kaaladiyae saranam

Female : Soththodu sugangal undu sondhngal neraiya undu
Aththanaiyum thuranthu vandhen aadhaaram neeyae endru
Soththodu sugangal undu sondhngal neraiya undu
Aththanaiyum thuranthu vandhen aadhaaram neeyae endru

Female : Kankanda deivamae kandhanae thunaiyendru
Unnaiyae naadi vandhen
Munn vandhu paarkkindra muruganae thunai endru
Unnaiyae saran adainthaen

Female : Kankanda deivamae kandhanae thunaiyendru
Unnaiyae naadi vandhen
Munn vandhu paarkkindra muruganae thunai endru
Unnaiyae saran adainthaen

Female : Anbu karam neettu aadharavu kaattu
Anbu karam neettu aadharavu kaattu
Aarumuga velavanae nallavazhi kaattu
Nallavazhi kaattu
Velavanae murugaa un kaaladiyae saranam

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : அலையாடும் செந்தூரில் ஆங்கார மூர்த்தியாய்
சூரசம்ஹாரம் புரிந்தாய்
அந்த ஆவேசம் தணியவே தந்தையருள் வேண்டியே
திருமுருகன் பூண்டி வந்தாய்
என் தாயும் தந்தையும் நீயல்லவா
உன் பிள்ளை குறை தீர்த்திடுவாய் வடிவேலவா….

பெண் : வேலவனே முருகா உன் காலடியே சரணம்
வேலவனே முருகா உன் காலடியே சரணம்
வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ
வேலவனே முருகா உன் காலடியே சரணம்
வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ
வேலவனே முருகா உன் காலடியே சரணம்

பெண் : ஈராறு விழிகளிலே எப்போது அருள் சுரக்கும்
என்னாசை கண்மணிக்கு எப்போது ஒளி பிறக்கும்
ஈராறு விழிகளிலே எப்போதும் அருள் சுரக்கும்
என்னாசை கண்மணிக்கு எப்போது ஒளி பிறக்கும்

பெண் : பெற்றவர்கள் செய்த பிழை பிள்ளைகளை சேருவதா
பெற்றவர்கள் செய்த பிழை பிள்ளைகளை சேருவதா
குற்றமே ஆனாலும் குறை தீர்க்க கூடாதா
வேலவனே முருகா உன் காலடியே சரணம்
வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ
வேலவனே முருகா உன் காலடியே சரணம்

பெண் : சொத்தோடு சுகங்கள் உண்டு சொந்தங்கள் நிறைய உண்டு
அத்தனையும் துறந்து வந்தேன் ஆதாரம் நீயே என்று
சொத்தோடு சுகங்கள் உண்டு சொந்தங்கள் நிறைய உண்டு
அத்தனையும் துறந்து வந்தேன் ஆதாரம் நீயே என்று

பெண் : கண்கண்ட தெய்வமே கந்தனே துணையென்று
உன்னையே நாடி வந்தேன்
முன் வந்து பார்க்கின்ற முருகனே துணையென்று
உன்னையே சரணடைந்தேன்

பெண் : கண்கண்ட தெய்வமே கந்தனே துணையென்று
உன்னையே நாடி வந்தேன்
முன் வந்து பார்க்கின்ற முருகனே துணையென்று
உன்னையே சரணடைந்தேன்

பெண் : அன்பு கரம் நீட்டு ஆதரவு காட்டு
அன்பு கரம் நீட்டு ஆதரவு காட்டு
ஆறுமுக வேலவனே நல்லவழிக்காட்டு
நல்ல வழிக்காட்டு…..
வேலவனே முருகா உன் காலடியே சரணம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here