Singer : M. S. Vishwanathan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Vellai kalai uduththum kalaimagalae
Nee vithavaiyalla athai naan arivaen
Ival illa kamalam adhil uraiyum idam
Oruvarukko illai iruvarukko

Male : Vellai kalai uduththum kalaimagalae
Nee vithavaiyalla athai naan arivaen
Ival illa kamalam adhil uraiyum idam
Oruvarukko illai iruvarukko

Male : Oruvanukku maaliyittaal
Avaraial kandaal
Matoruvarukku maalaiyittaal
Izhanthuvittaal
Ival sumangaliyaa illai amangaliyaa

Male : Sumangali enbatharkku ivan satchi
Amangali enbatharkku avan satchi
Kalanguthammaa ival manasatchi
Nee kaatividu oru katchi….

Male : Vellai kalai uduththum kalaimagalae
Nee vithavaiyalla athai naan arivaen
Ival illa kamalam adhil uraiyum idam
Oruvarukko illai iruvarukko

Male : Nangaiyar vaazhvil idhu pudhiya kadhai
Idhu nadaththinaaal ivalukku chithravathai
Kavalaiyil vaaduthammaa pachaikili
Nee kaatti vidu vaazhvil nalla vazhi

Male : Vellai kalai uduththum kalaimagalae
Nee vithavaiyalla adhai naan arivaen
Ival ulla kamalam adhil uraiyum idam
Oruvarukko illai iruvarukko

Male : Kattiyathumattumindri thottavarillai
Ival kanni kazhikka oru kaariyamillai
Palliyaraiyilae avanai kaana ninaiththaal
Indru palliyilae avanai landu pidiththaal

Male : Kelvi piranthathammaa bathil illai
Oru kilarchchi ezhunthathammaa mudivu illai
Vaazhvu kalanguthammaa vazhiyillai
Vaai thiranthu solla mozhiyillai

Male : Vellai kalai uduththum kalaimagalae
Nee vithavaiyalla adhai naan arivaen
Ival ulla kamalam adhil uraiyum idam
Oruvarukko illai iruvarukko

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ

ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ

ஆண் : ஒருவனுக்கு மாலையிட்டாள்
அவரைக் கண்டாள்
மற்றொருவருக்கு மாலையிட்டாள்
இழந்து விட்டாள்
இவள் சுமங்கலியா இல்லை அமங்கலியா

ஆண் : சுமங்கலி என்பதற்கு இவன் சாட்சி
அமங்கலி என்பதற்கு அவன் சாட்சி
கலங்குதம்மா இவள் மனசாட்சி
நீ காட்டிவிடு ஒரு காட்சி………..

ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ

ஆண் : நங்கையர் வாழ்வில் இது புதிய கதை
இது நடந்ததினால் இவளுக்கு சித்ரவதை
கவலையில் வாடுதம்மா பச்சைக்கிளி
நீ காட்டி விடு வாழ்வில் நல்ல வழி

ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ

ஆண் : கட்டியது மட்டுமன்றி தொட்டவரில்லை
இவள் கன்னி கழிக்க ஒரு காரியமில்லை
பள்ளியறையிலே அவனைக் காண நினைத்தாள்
இன்று பள்ளியிலே அவனைக் கண்டு பிடித்தாள்

ஆண் : கேள்வி பிறந்ததம்மா பதில் இல்லை
ஒரு கிளர்ச்சி எழுந்ததம்மா முடிவு இல்லை
வாழ்வு கலங்குதம்மா வழியில்லை
வாய் திறந்து சொல்ல மொழியில்லை

ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here