Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Vellikkizhamai indru vettri thirunaal
Vellikkizhamai indru vettri thirunaal
Female : Valli idaththil vadivelan varum naal
Valli idaththil vadivelan varum naal
Idhu iniya iniya ninaivu malarum mana naalae

Male : Vellikkizhamai indru vettri thirunaal

Female : Vaalipa vegaththil
Kaalaiyai pidippathu annaalil
Kaalaiyai pidiththa kai
Karandiyai pidippathu innaalil

Female : Vaalipa vegaththil
Kaalaiyai pidippathu annaalil
Kaalaiyai pidiththa kai
Karandiyai pidippathu innaalil

Male : Ennaal aagaathammaa idhu koodaathammaa
Un mael kadhal kondaal intha aniyaayamaa
Idhu niyaayamaa
Female : Intha sevai ingu thevai
Intha sevai ingu thevai

Male : Vellikkizhamai indru vettri thirunaal
Female : Valli idaththil vadivelan varum naal
Idhu iniya iniya ninaivu malarum mana naalae

Male : Vellikkizhamai indru vettri thirunaal…..

Female : Kaaviya druapathi
Kadhalai sothikka vanthaalo
Kannapiraan thantha selai
Nammidam thanthaalo

Male : Unnai ninaitheanammaa
Selai thuvaithaenammaa
Kadhal thoduthaenammaa saayam veluthaenammaa
Veluthae poyittaen po

Female : Intha sevai ingu thevai
Intha sevai ingu thevai
Vellikkizhamai indru vettri thirunaal…..

Female : Sakthiyin sannathi
Saatchiyaai nirkuthu munnaalae
Kaigalai kaattungal
Solvathai sollungal kannaalae

Female : Sakthiyin sannathi
Saatchiyaai nirkuthu munnaalae
Kaigalai kaattungal
Solvathai sollungal kannaalae

Male : Ini vazhiyaethammaa
Solla mozhiyaethammaa
Ini vazhiyaethammaa
Solla mozhiyaethammaa
Inthapillai oru thollai
Female : Vidum ennai peravillai

Male : Vellikkizhamai indru vettri thirunaal
Female : Valli idaththil vadivelan varum naal
Idhu iniya iniya ninaivu malarum mana naalae
Both : Laalaalaalaa lalalallaa….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்
வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்
பெண் : வள்ளி இடத்தில் வடிவேலன் வரும் நாள்
வள்ளி இடத்தில் வடிவேலன் வரும் நாள்
இது இனிய இனிய நினைவு மலரும் மணநாளே

ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்…..

பெண் : வாலிப வேகத்தில்
காளையை பிடிப்பது அந்நாளில்
காளையைப் பிடித்தக் கை
கரண்டியை பிடிப்பது இந்நாளில்

பெண் : வாலிப வேகத்தில்
காளையை பிடிப்பது அந்நாளில்
காளையைப் பிடித்தக் கை
கரண்டியை பிடிப்பது இந்நாளில்

ஆண் : என்னால் ஆகாதம்மா இது கூடாதம்மா
உன் மேல் காதல் கொண்டால் இந்த அநியாயமா
இது நியாயமா……..
பெண் : இந்த சேவை இங்கு தேவை
இந்த சேவை இங்கு தேவை

ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்
பெண் : வள்ளி இடத்தில் வடிவேலன் வரும் நாள்
இது இனிய இனிய நினைவு மலரும் மணநாளே

ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்…..

பெண் : காவிய திரௌபதி
காதலை சோதிக்க வந்தாளோ
கண்ணப்பிரான் தந்த சேலை
நம்மிடம் தந்தாளோ

ஆண் : உன்னை நினைத்தேனம்மா
சேலை துவைத்தேனம்மா
காதல் தொடுத்தேனம்மா சாயம் வெளுத்தேனம்மா
வெளுத்தேப் போயிட்டேன் போ……

பெண் : இந்த சேவை இங்கு தேவை
இந்த சேவை இங்கு தேவை
வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்…..

பெண் : சக்தியின் சன்னதி
சாட்சியாய் நிற்குது முன்னாலே
கைகளை காட்டுங்கள்
சொல்வதை சொல்லுங்கள் கண்ணாலே

பெண் : சக்தியின் சன்னதி
சாட்சியாய் நிற்குது முன்னாலே
கைகளை காட்டுங்கள்
சொல்வதை சொல்லுங்கள் கண்ணாலே

ஆண் : இனி வழியேதம்மா
சொல்ல மொழியேதம்மா
இனி வழியேதம்மா
சொல்ல மொழியேதம்மா
இந்தப்பிள்ளை ஒரு தொல்லை
பெண் : விடும் என்னை பெறவில்லை…..

ஆண் : வெள்ளிக்கிழமை இன்று வெற்றித் திருநாள்
பெண் : வள்ளி இடத்தில் வடிவேலன் வரும் நாள்
இது இனிய இனிய நினைவு மலரும் மணநாளே
இருவர் : லாலாலாலா லலலல்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here