Singer : P. B. Sreenivas

Music by : K. V. Mahadevan

Male : Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram
Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram
Idhu ullapadi indha ulagam
Unarthum oru paadam
Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram

Male : Pillai enum bandha paasathai
Thalli pirindhodum
Than ullatthai irumbu pettagamaakki
Thaazh podum
Illaadhavar evaraana podhilum
Elli nagaiyaadum
Illaadhavar evaraana podhilum
Elli nagaiyaadum
Inai illaadha annai anbukku kooda
Sollaal thadai podum

Male : Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram

Male : Vellathinaal varum palla maedu pol
Selvam varum pogum
Idhai ellalavaenum ennaadha kanjarkku
Thunbam varavaagum

Male : Kallamillaadha anbu selvamae
Endrum nilaiyaagum
Kallamillaadha anbu selvamae
Endrum nilaiyaagum
Kashatam theerum kavalaigal maarum
Inbam uruvaagum

Male : Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram
Idhu ullapadi indha ulagam
Unarthum oru paadam

Male : Velli panathukkum
Nalla gunathukkum vegu dhooram

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம்
உணர்த்தும் ஒரு பாடம்
வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்

ஆண் : பிள்ளை எனும் பந்த பாசத்தை
தள்ளி பிரிந்தோடும்
தன் உள்ளத்தை இரும்பு பெட்டகமாக்கி
தாழ் போடும்
இல்லாதவர் எவரான போதிலும்
எள்ளி நகையாடும்
இல்லாதவர் எவரான போதிலும்
எள்ளி நகையாடும்
இணை இல்லாத அன்னை அன்புக்கு கூட
சொல்லால் தடை போடும்

ஆண் : வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்

ஆண் : வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல்
செல்வம் வரும் போகும்
இதை எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்கு
துன்பம் வரவாகும்

ஆண் : கள்ளமில்லாத அன்பு செல்வமே
என்றும் நிலையாகும்
கள்ளமில்லாத அன்பு செல்வமே
என்றும் நிலையாகும்
கஷ்டம் தீரும் கவலைகள் மாறும்
இன்பம் உருவாகும்

ஆண் : வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்
இது உள்ளபடி இந்த உலகம்
உணர்த்தும் ஒரு பாடம்

ஆண் : வெள்ளி பணத்துக்கும்
நல்ல குணத்துக்கும் வெகு தூரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here