Singer : Seerkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Veruthaen manai vaazhkaiyai
Veruthaen manai vaazhkaiyai
Veruthaen naan veruthaen
Vittozhindhen vilangum kuzhai kaadhudai vedhiyanae
Naan veruthaen
Vittozhindhen vilangum kuzhai kaadhudai vedhiyanae
Naan veruthaen manai vaazhkaiyai

Male : Iruthaai ilangaikku iraiyaaiyavanai
Thalai pathodu thozh pala ittru vizha
Iruthaai ilangaikku iraiyaaiyavanai
Thalai pathodu thozh pala ittru vizha
Karuthaai kadal nanju amudhu undu
Kandam kadukupiraman thalai aindhilum ondraruthaai
Kadalangarai mel magodhai aniyaar
Kadalangarai mel magodhai aniyaar
Pozhil anjaikalaththu appanae

Male : Naan veruthaen …vittozhindhen
Vangum kuzhai kaadhudai vedhiyanae
Naan veruthaen manai vaazhkaiyai
Naan veruthaen manai vaazhkaiyai

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா

ஆண் : வெறுத்தேன் மனை வாழ்க்கையை
வெறுத்தேன் மனை வாழ்க்கையை
வெறுத்தேன் நான் வெறுத்தேன்
விட்டொழிந்தேன் விளங்கும் குழைக் காதுடை வேதியனே
நான் வெறுத்தேன்
விட்டொழிந்தேன் விளங்கும் குழைக் காதுடை வேதியனே
நான் வெறுத்தேன் மனை வாழ்க்கையை

ஆண் : இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத்
தலை பத்தொடு தோள் பல இற்று விழக்
இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத்
தலை பத்தொடு தோள் பல இற்று விழக்
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம்
கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்றறுத்தாய்
கடலங்கரை மேல் மகோதை அணியார்
கடலங்கரை மேல் மகோதை அணியார்
பொழில் அஞ்சைக்களத்து அப்பனே…..

ஆண் : நான் வெறுத்தேன்…..விட்டொழிந்தேன்
விளங்கும் குழைக் காதுடை வேதியனே
நான் வெறுத்தேன் மனை வாழ்க்கையை
நான் வெறுத்தேன் மனை வாழ்க்கையை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here