Singers : Mano, S. N. Surrendar

and Deepan Chakravarthy

Music by : Ilayaraja

Chorus : {Vetri varudhu vetri varudhu
Pudhiya ulagam namadhu namadhu
Nimirndhidu magizhndhidu mulangidu} (2)

Chorus : Kottu murasu kotti muzhakku
Kodumai adimai madamai madiya
Elunthidu nadanthidu mulangidu
Kodumai adimai madamai madiya
Elunthidu nadanthidu mulangidu

Chorus : Thalaiyai nimirthu thamizha
Hae thamizha
Thadaiyai norukku thamizha
Hae thamizha

Chorus : Thalaiyai nimirthu thamizha
Thadaiyai norukku thamizha
Irundu kedakkum unathu vazhvil
Velicham vendum

Chorus : {Vetri varudhu vetri varudhu
Pudhiya ulagam namadhu namadhu
Nimirndhidu magizhndhidu mulangidu} (2)

Chorus : ………………………..

Male : Adhi manidhan polavae
Indru vazhvu vazhvadha
Adithu pidithu adithu koduthu
Surandi kodupatha
Angum ingum yeippavar
Aandu nammai saaipadha
Endrum engum naamum
Avargal thaerai izhupatha

Male : Koozhukaaga yengi thavikkum
Namadhu koothathil
Paalukkaga azhuthu setha
Kuzhanthaigal eththanai
Pichaikaarar pola vaazhum
Namadhu vargathil
Ottu pichai vaangi uyarntha
Manidhan eththanai

Male : Vetru manidhan namadhu
Inaththai odhukinaan
Vetru manidhan namadhu
Inaththai odhukinaan
Nam naatu manidhan
Ivanum uyirai edukkiraan
Nam naatu manidhan
Ivanum uyirai edukkiraan

Chorus : {Vetri varudhu vetri varudhu
Pudhiya ulagam namadhu namadhu
Nimirndhidu magizhndhidu mulangidu} (2)

Male : Padikkum ilaingar kootamae
Unnakaedhu velaiyae
Paditha pattam veetu suvaril
Maati veikkavaa
Yettu padippu pothumae
Naatu padippu padikavaa
Aati veikkum kodiya vazhvai
Adithu norukkava

Male : Pochu kavizhndhu pochu tamizhar
Namadhu kalaigalae
Podhum kanavu kandu vazhndha
Ulagu nilaigalae
Namadhu vazhvai nadathi sella
Thalaivanillaiyae
Kalangum manadhai thetra ingu
Oruvanillaiyae

Male : Enakkum unakkum
Thalaivan thondan naamada
Enakkum unakkum
Thalaivan thondan naamada
Edhuvum podhuvil
Endra vazhiyai naadadaa
Edhuvum podhuvil
Endra vazhiyai naadadaa

Chorus : Vetri varudhu vetri varudhu
Pudhiya ulagam namadhu namadhu
Nimirndhidu magizhndhidu mulangidu

Chorus : Kottu murasu kotti muzhakku
Kodumai adimai madamai madiya
Elunthidu nadanthidu mulangidu

Chorus : Thalaiyai nimirthu thamizha
Hae thamizha
Thadaiyai norukku thamizha
Hae thamizha

Chorus : Thalaiyai nimirthu thamizha
Thadaiyai norukku thamizha
Irundu kedakkum unathu vazhvil
Velicham vendum

Chorus : {Vetri varudhu vetri varudhu
Pudhiya ulagam namadhu namadhu
Nimirndhidu magizhndhidu mulangidu} (2)

பாடகர்கள் : மனோ, எஸ். என். சுரேந்தர்
மற்றும் தீபன் சக்ரவத்தி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : {வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு} (2)

குழு : கொட்டு முரசு கொட்டி முழக்கு
கொடுமை அடிமை மடமை மடிய
எழுந்திடு நடந்திடு முழங்கிடு
கொடுமை அடிமை மடமை மடிய
எழுந்திடு நடந்திடு முழங்கிடு

குழு : தலையை நிமிர்த்து தமிழா
ஹே தமிழா
தடையை நொறுக்கு தமிழா
ஹே தமிழா

குழு : தலையை நிமிர்த்து தமிழா
தடையை நொறுக்கு தமிழா
இருண்டு கிடக்கும் உனது வாழ்வில்
வெளிச்சம் வேண்டும்……

குழு : {வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு} (2)

குழு : …………………………………………………..

ஆண் : ஆதி மனிதன் போலவே
இன்றும் வாழ்வு வாழ்வதா
அடித்து பிடித்து அடித்து கெடுத்து
சுரண்டி கொடுப்பதா
அங்கும் இங்கும் ஏய்ப்பவர்
ஆண்டு நம்மை சாய்ப்பதா
என்றும் எங்கும் நாமும் அவர்கள்
தேரை இழுப்பதா

ஆண் : கூழுக்காக ஏங்கி தவிக்கும்
நமது கூட்டத்தில்
பாலுக்காக அழுது செத்த
குழந்தை எத்தனை
பிச்சைகாரர் போல வாழும்
நமது வர்க்கத்தில்
ஓட்டுப் பிச்சை வாங்கி உயர்ந்த
மனிதன் எத்தனை

ஆண் : வேற்று மனிதன்
நமது இனத்தை ஒடுக்கினான்
வேற்று மனிதன்
நமது இனத்தை ஒடுக்கினான்
நம் நாட்டு மனிதன்
இவனும் உயிரை எடுக்கிறான்
நம் நாட்டு மனிதன்
இவனும் உயிரை எடுக்கிறான்

குழு : {வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு} (2)

ஆண் : படிக்கும் இளைஞர் கூட்டமே
உனக்கேது வேலையே
படித்த பட்டம் வீட்டு சுவரில்
மாட்டி வைக்கவா
ஏட்டு படிப்பு போதுமே
நாட்டுப் படிப்பு படிக்கவா
ஆட்டி வைக்கும் கொடிய வாழ்வை
அடித்து நொறுக்கவா

ஆண் : போச்சு கவிழுந்து போச்சு தமிழர்
நமது தலைகளே
போதும் கனவு கண்டு வாழ்ந்த
உலகு நிலைகளே
நமது வாழ்வை நடத்திச் செல்ல
தலைவனில்லையே
கலங்கும் மனதை தேற்ற இங்கு
ஒருவனில்லையே

ஆண் : எனக்கும் உனக்கும்
தலைவன் தொண்டன் நாமடா
எனக்கும் உனக்கும்
தலைவன் தொண்டன் நாமடா
எதுவும் பொதுவில்
என்ற வழியை நாடடா…….
எதுவும் பொதுவில்
என்ற வழியை நாடடா………

குழு : வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு

குழு : கொட்டு முரசு கொட்டி முழக்கு
கொடுமை அடிமை மடமை மடிய
எழுந்திடு நடந்திடு முழங்கிடு

குழு : தலையை நிமிர்த்து தமிழா
ஹே தமிழா
தடையை நொறுக்கு தமிழா
ஹே தமிழா

குழு : தலையை நிமிர்த்து தமிழா
தடையை நொறுக்கு தமிழா
இருண்டு கிடக்கும் உனது வாழ்வில்
வெளிச்சம் வேண்டும்……

குழு : {வெற்றி வருது வெற்றி வருது
புதிய உலகம் நமது நமது
நிமிர்ந்திடு மகிழ்ந்திடு முழங்கிடு} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here