Singer : Seerkazhi Govindarajan

Music by : V. Kumar

Male : Agara mudhala ezhuththellaam
Aadhi bagavan muthatrae ulagu…

Male : Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Ada sarthaam podaa
Thalaividhi enbathu verun koochal

Male : Enni thuninthaal ingu
Enna nadakkaathathu
Konjam muyandraal ingu
Ethu kidaikkaathathu

Male : Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal

Male : Pillaiyai perukira
Ammaavukku paththu maasamum
Edhir neechal
Porakkura kozhantha
Nadakkura varaiyil tharaiyil poduvathu
Edhir neechal

Male : Pallikku palli
Idaththukku alaiyum appanukkathu thaan
Edhir neechal
Pillaikku eppadi idam kidaichaalum
Paritchai vandhaa
Edhir neechal edhir neechal…

Male : Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal

Male : Kadarkaraiyoram nadakkura kaadhal
Kalyaanam mudippathu
Edhir neechal
Kanakkukku melae pillaiyai peththu
Kaalangazhippathum
Edhir neechal

Male : Kanmoodi vazhakkam
Manmoodi poga karuthai cholluvathu
Edhir neechal
Veettukku veedu ottukkal vaangi
Padhavikku varuvathu
Edhir neechal edhir neechal….

Male : Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal

Male : Oru pidi sotrukku
Oru jaan vaiyiru poraduvathum
Edhir neechal
Oru pidi mannukku
Urimai kondu porkalam povadhum
Edhir neechal

Male : Ettu adi mannil
Sikki vidaamal thappa nenaipathu
Edhir neechal
Kooti kazhithu pottu paarkaiyil
Kadasiyil varaiyil
Edhir neechal edhir neechal

Male : Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal
Ada sarthaam podaa
Thalaividhi enbathu verun koochal

Male : Enni thuninthaal ingu
Enna nadakkaathathu
Konjam muyandraal ingu
Ethu kidaikkaathathu

Male : Vetri vendumaa..
Pottu paaradaa edhir neechal

 

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : அகர முதல
எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

ஆண் : வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி
என்பது வெறுங்கூச்சல்

ஆண் : எண்ணித்
துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால்
இங்கு எது கிடைக்காதது

ஆண் : வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

ஆண் : பிள்ளையைப்
பெறுகிற அம்மாவுக்கு
பத்து மாசமும் எதிர்நீச்சல்
பொறக்குற கொழந்த நடக்குற
வரையில் தரையில் போடுவது
எதிர்நீச்சல்

ஆண் : பள்ளிக்குப்
பள்ளி இடத்துக்கு
அலையும் அப்பனுக்கது
தான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம்
கிடைச்சாலும் பரிட்சை
வந்தா எதிர்நீச்சல் எதிர்நீச்சல்

ஆண் : வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

ஆண் : கடற்கரையோரம்
நடக்குற காதல் கல்யாணம்
முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையை
பெத்து காலங்கழிப்பதும் எதிர்நீச்சல்

ஆண் : கண்மூடி வழக்கம்
மண்மூடிப் போகக் கருத்தைச்
சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள்
வாங்கி பதவிக்கு வருவது
எதிர்நீச்சல் எதிர்நீச்சல்

ஆண் : வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்

ஆண் : ஒரு பிடி சோற்றுக்கு
ஒரு ஜான் வயிறு போராடுவதும்
எதிர் நீச்சல் ஒரு பிடி மண்ணுக்கு
உரிமை கொண்டு போர்க்களம்
போவதும் எதிர் நீச்சல்

ஆண் : எட்டு அடி மண்ணில்
சிக்கி விடாமல் தப்ப நினைப்பது
எதிர் நீச்சல் கூட்டி கழித்து போட்டு
பார்க்கையில் கடைசியில் வரையில்
எதிர் நீச்சல் எதிர் நீச்சல்

ஆண் : வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி
என்பது வெறுங்கூச்சல்

ஆண் : எண்ணித்
துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால்
இங்கு எது கிடைக்காதது

ஆண் : வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here