Singer : Hariharan

Music by : Devi Sri Prasad

Male : Vidhai pola maraivaaga Vazhnthavan indru thaan Madha yaanai pol varugiran Adaiyaalam theriyaadha Udaiyodu thirinthavan Padaiyodu nadai payilgiran

Male : Imai pozhuthum Urangaadha kaavalan Ivan sumai kandu Miraladha sevagan Kolgaiyil maaradha komagan Ivan dhisai engum Kaathidum thirumagan

Male : Idi vandhu vizhunthaalum Idiyaadhavan Idar enna vanthaalum Idaraathavan Patharaamal sitharaamal Adhiraamal udhiraamal Irukindra varam petravan

Chorus : ………………………….

Male : Pagai enna vanthaalum Patharadhavan Padhavigal thaduthaalum Paniyaadhavan Oor koodi ethirthaalum miraladhavan Otraiyaai pala perai vadham seidhavan

Male : Edhirigal evar enru Ennadhavan Tholviyin vizhumbilum Thuvalaadhavan Vilai enna thanthaalum valaiyadhavan Elimaikku ivan endrum thunaiyanavan

Male : Malaiyaaga nindru Marporil vendru Adutha thalam ethuvendr…aaan….

Male : Vidhai pola maraivaaga Vazhnthavan indru thaan Madha yaanai pol varugiran Adaiyaalam theriyaadha Udaiyodu thirinthavan Padaiyodu nadai payilgiran

Male : Thaniyaaga irundhaalum Padai thaan ivan Dharaniyai pizhakindra Edai thaan ivan Pulan ainthum thelivaaga Irukindravan Puram naangum elidhaaga Valaikindravan

Male : Udaiyaatha thadaigalai Udaikindravan Unmaiyaai saathanai padaikindravan Erimalai kolambaaga kothikindravan Kuri vaithu samarilae jeikindravan

Male : Minnal ena seeri Amila mazhai thoovi Azhukindri desathai Azhagaaga thudaikindravan

Male : Vidhai pola maraivaaga Vazhnthavan indru thaan Madha yaanai pol varugiran Adaiyaalam theriyaadha Udaiyodu thirinthavan Padaiyodu nadai payilgiran

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்றுதான்
மதயானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

ஆண் : இமை பொழுதும்
உறங்காத காவலன்
இவன் சுமை கண்டு
மிரளாத சேவகன்
கொள்கையில் மாறாத கோமகன்
இவன் திசை எங்கும்
காத்திடும் திருமகன்

ஆண் : இடி வந்து விழுந்தாலும்
இடியாதவன்
இடர் என்ன வந்தாலும்
இடறாதவன்
பதறாமல் சிதறாமல்
அதிராமல் உதிராமல்
இருக்கின்ற வரம் பெற்றவன்

குழு : ………………………………….

ஆண் : பகை என்ன வந்தாலும்
பதறாதவன்
பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்
ஊர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்
ஒற்றையாய் பல பேரை வதம் செய்தவன்

ஆண் : எதிரிகள் எவர் என்று
என்னதவன்
தோல்வியின் விளும்பிலும்
துவளாதவன்
விலை என்ன தந்தாலும் வலையாதவன்
எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்

ஆண் : மலையாக நின்று
மற்போரில் வென்று
அடுத்த தளம் எதுவென்று….
அஞ்சாமல் தளமாடுவான்…..ஆன்….

ஆண் : விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்றுதான்
மதயானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

ஆண் : தனியாக இருந்தாலும்
படைதான் இவன்
தரணியை பிளக்கின்ற
எடைதான் இவன்
புலன் ஐந்தும் தெளிவாக
இருகின்றவன்
புறம் நான்கும் எளிதாக
வளைக்கின்றவன்

ஆண் : உடையாத தடைகளை
உடைக்கின்றவன்
உண்மையாய் சாதனை படைக்கின்றவன்
எரிமலை குழம்பாக கொதிக்கின்றவன்
குறி வைத்து சமரிலே ஜெய்கின்றவன்

ஆண் : மின்னல் என சீறி
அமில மழை தூவி
அழுக்கின்றி தேசத்தை
அழகாக துடைக்கின்றவன்

ஆண் : விதை போல மறைவாக
வாழ்ந்தவன் இன்றுதான்
மதயானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத
உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here