Vidhi Maarudha Song Lyrics from Lucky Baskhar – 2024 Film, Starring Dulquer Salmaan, Meenakshi Chaudhary and Others. This song was sung by Krishna Tejasvi and the music was composed by G. V. Prakash Kumar Lyrics works are penned by Balaji Venugopal.
Singer : Krishna Tejasvi
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Balaji Venugopal
Male : Vidhi maarudhaa
Vidai thdudhaa
Un vaaname kudai saayudha
Pudhir aanadha
Puriyadhadha
Puvi maiyame thadumarudha
Male : Nee siraginai virithida
Thudithidum velaiyil
Koodedhaan kalaiyaadhaa
Un maaligai mel oru
Idi ondru vilunthida
Thugazhaai ponadhaa
Male : Nee kanda un kanavugal
Sila nodigalil kalaindhidum
Megam pol maraiyaadhaa
Idhai endrenum nee sindhithaaya
Male : Vaazhnthaaya veezhnthaaya indru
Vendraaya nindraaya endru
Ezhunthaaya mudinthaaya
Un kadhaiyil
Male : Valarattil oru pakkam vanga
Alaindhaaye un kaalgal yenga
Padaithannai izhandhenna saadhithaai
Un porkalathil
Un porkalathil
Male : Oodum neerile or ilai polave
Thavarindri midhandhida
Vidhi karai serkkumae
Kaayam aarumae kaar irul neengumae
Kani tharum maramena
Kaalamum koorumae
Male : Indha vaazhve naadagam
Nadigarae yaavarum
Engo undhan vedam
Kalainthidum udai padum
Kaalam varum
Male : Un ilakkinai jeyithida
Odiya ottangal
Sertha idam paarthaayaa
Adhu nee thuvangiya
Mudhal kodendru therindha pin
Male : Vaazhnthaaya veezhnthaaya indru
Vendraaya nindraaya endru
Ezhunthaaya mudinthaaya
Un kadhaiyil
Male : Valarattil oru pakkam vanga
Alaindhaaye un kaalgal yenga
Padaithannai izhandhenna saadhithaai
Un porkalathil
Un porkalathil
பாடகர் : கிருஷ்ணா தேஜஸ்வி
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : பாலாஜி வேணுகோபால்
ஆண் : விதி மாறுதா
விடை தேடுதா
உன் வானமே குடை சாயுதா
புதிர் ஆனதா
புரியாததா
புவி மையமே தடுமாறுதா
ஆண் : நீ சிறகினை விரித்திட
துடித்திடும் வேளையில்
கூடேதான் கலையாதா
உன் மாளிகை மேல் ஒரு
இடி ஒன்று விழுந்திட
துகளாய் போனதா
ஆண் : நீ கண்ட உன் கனவுகள்
சில நொடிகளில் கலைந்திடும்
மேகம் போல் மறையாதா
இதை என்றென்னும் நீ சிந்தித்தாயா
ஆண் : வாழ்ந்தாயா வீழ்ந்தாயா இன்று
வென்றாயா நின்றாயா எங்கு
எழுந்தாயா முடிந்தாயா
உன் கதையில்
ஆண் : வரலாற்றில் ஒரு பக்கம் வாங்க
அலைந்தாயே உன் கால்கள் ஏங்க
படைதன்னை இழந்தென்ன
சாதித்தாய்
உன் போர்க்களத்தில்
உன் போர்க்களத்தில்
ஆண் : ஓடும் நீரிலே ஓர் இலை போலவே
தவறின்றி மிதந்திடு
விதி கரை சேர்க்குமே
காயம் ஆறுமே காரிருள்
நீங்குமே
கனி தரும் மரமென
காலமும் கூறுமே
ஆண் : இந்த வாழ்வே நாடகம்
நடிகரே யாவரும்
என்றோ உந்தன் வேடம்
கலைந்திடும் உடை படும்
உன் மனம்
ஆண் : உன் இழக்கினை ஜெயித்திட
ஓடிய ஓட்டங்கள்
சேர்த்த இடம் பார்த்தாயா
அது நீ துவங்கிய
முதல் கோடென்று தெரிந்த பின்
ஆண் : வாழ்ந்தாயா வீழ்ந்தாயா இன்று
வென்றாயா நின்றாயா எங்கு
எழுந்தாயா முடிந்தாயா
உன் கதையில்
ஆண் : வரலாற்றில் ஒரு பக்கம் வாங்க
அலைந்தாயே உன் கால்கள் ஏங்க
படைதன்னை இழந்தென்ன
சாதித்தாய்
உன் போர்க்களத்தில்
உன் போர்க்களத்தில்