Singer : Jikki

Music by : Master Venu

Lyrics by : A. Maruthakasi

Female : Vilakethi veikkavum illae
Vennilavu mulaikkavum illae
Veed eri vandhu vittingha neenga
Balae aalungha
Machaan engae vandheenga

Female : Vilakethi veikkavum illae
Vennilavu mulaikkavum illae
Veed eri vandhu vittingha neenga
Balae aalungha
Machaan engae vandheenga

Female : Velicham pottu thiriyum ungalai
Azhaichathu yaarungha
Ullae azhaichathu yaarunga
Vera yaarum illadha samayam
Vandhadhu sariyaanga
Neenga vandhathu sariyaanga
Thalukka pesi thaaja panni
Mayakkum ennam yenga
Balae aalungha
Machaan engae vandhingha

Female : Vaayalae alli eraikkum
Vallal thaanungha neenga
Kodai vallal thanunga neenga
Vaayalae alli eraikkum
Vallal thaanungha neenga
Kodai vallal thanunga neenga

Female : Kaiyaalae kaakai kuruviyai kooda
Echal kaiyaalae kaakaikuruviyai kooda
Virattavum maatingha neenga
Mai velaiyaalae karumi thanathai
Maraikka mudiyathu ponga
Balae aalungha
Machaan engae vandhingha

Female : Ponnum porulum kaiyil irundha
Munnalae varalangha
Neenga munnalae varalangha
Ennaasai kaadhal venuminna
En ki mele tharalangha
Adhai en kai mele tharalangha

Female : Kannaalae pesi kaanikkai kodutha
Marakkavum maatten vaanga
Balae aalungha neenga
Ennai aalungha
Machaan ennai aalungha
Machaan ennai aalungha

பாடகி  : ஜிக்கி

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : விளக்கேத்தி வைக்கவுமில்லே
வெண்ணிலவு முளைக்கவுமில்லே
வீடேறி வந்து விட்டீங்க
நீங்க பலே ஆளுங்க
மச்சான் எங்கே வந்தீங்க

பெண் : விளக்கேத்தி வைக்கவுமில்லே
வெண்ணிலவு முளைக்கவுமில்லே
வீடேறி வந்து விட்டீங்க
நீங்க பலே ஆளுங்க
மச்சான் எங்கே வந்தீங்க

பெண் : வெளிச்சம் போட்டு திரியும்
உங்களை அழைச்சது யாருங்க
உள்ளே அழைச்சது யாருங்க
வேறே யாரும் இல்லாத சமயம்
வந்தது சரியாங்க
நீங்க வந்தது சரியாங்க
தளுக்கா பேசி தாஜா பண்ணி
மயக்கும் எண்ணம் ஏங்க
பலே ஆளுங்க
மச்சான் எங்கே வந்தீங்க

பெண் : வாயாலே அள்ளி எறைக்கும் வள்ளல் தானுங்க
நீங்க கொடை வள்ளல் தானுங்க நீங்க
வாயாலே அள்ளி எறைக்கும் வள்ளல் தானுங்க
நீங்க கொடை வள்ளல் தானுங்க நீங்க

பெண் : கையாலே காக்கை குருவியைக் கூட
எச்சல் கையாலே காக்கை குருவியைக் கூட
விரட்டவும் மாட்டீங்க நீங்க
மை வேலையாலே கருமித்தனத்தை
மறைக்க முடியாது போங்க
பலே ஆளுங்க மச்சான் எங்கே வந்தீங்க

பெண் : பொன்னும் பொருளும் கையிலிருந்தா
முன்னாலே வரலாங்க
நீங்க முன்னாலே வரலாங்க
என்னாசை காதல் வேணுமின்னா
என் கை மேலே தரலாங்க அதை
என் கை மேலே தரலாங்க

பெண் : கண்ணாலே பேசி காணிக்கை கொடுத்தா
மறக்கவும் மாட்டேன் வாங்க
பலே ஆளுங்க நீங்க என்னை ஆளுங்க…
மச்சான் என்னை ஆளுங்க…
மச்சான் என்னை ஆளுங்க…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here