Singers : Naresh Iyer and Rita

Music by : Ganesh Raghavendra

Male : Villadhi villi
Endhan pakkam vandhaai
Thoomgaamal thupparinthu
Thozhi aanaai

Male : Nanjulla kallan endrae
Ennam kondaai
Nenjulla nallan endru
Kandarinthaai
Sidu sidu vena seenditaai
Sadugudu ena aaditaai
Para paravena dhinamum porittaai

Male : Oh en thiramai vaasithaai
En thanimai nesithaai
Dhisai maariya thendral pola nindraai

Female : Thaduppanai yedhum illaa
Nadhi thodar naanthaanae
Niraayudhan unnai kandu
Satrae nindrenae

Female : Adaavadi vaadham seiyum
Thadaaladi penn thaanae
Alaudin bootham pola
Anbaai poothenae

Female : Vazhi thavariya sogam
Viraivinil athu theerum
Unai maranthu
Undhan vizhigal thoongumae
Oh nizhal ulagam pothum
Ninai azhaikkum kaalam
Irulai vittu veliyae varuvaai neeyae

Male : Villadhi villi
Endhan pakkam vandhaai
Thoomgaamal thupparinthu
Thozhi aanaai

Chorus : …………………………..

Male : Inimaigal yedhum illaa
Thunigaram naanthaanae
Manogari undhan natpil
Mavvam kandenae

Male : Alavuthal yedhum indri
Ulaa varum aanthaanae
Kalebara kanni undhan
Parivil sarinthenae

Male : Thalai maraigira ennil
Kurai ulla oru nenjil
Mudhal mudhalaai maatram ondru
Thondruthae
Oh thariketta oru vaanam
Tharai erangidum neram
Aravanaikkum boomi paadhai neeyae

Male : Villadhi villi
Endhan pakkam vandhaai
Pakkam vandhaai
Thoomgaamal thupparinthu
Thozhi aanaai

Male : Nanjulla kallan endrae
Ennam kondaai
Nenjulla nallan endru
Kandarinthaai

Female : Vegu naalaai kuri vaithen
Viral thadayangal sodhithen
Unai siraiyida valigal theditten
Oh un saridhai vaasithen
Un thanimai nesithen
Unakkena sila kelvigal
Parisaai thandhen

பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ரீட்டா

இசையமைப்பாளர் : கணேஷ் ராகவேந்திரா

ஆண் : வில்லாதி வில்லி
எந்தன் பக்கம் வந்தாய்
தூங்காமல் துப்பறிந்து
தோழி ஆனாய்

ஆண் : நஞ்சுள்ள கள்ளன் என்றே
எண்ணம் கொண்டாய்
நெஞ்சுள்ள நல்லன் என்று
கண்டறிந்தாய்
சிடுசிடுவென சீண்டிட்டாய்
சடுகுடு என ஆடிட்டாய்
பரபரவென தினமும் போரிட்டாய்

ஆண் : ஓ என் திறமை வாசித்தாய்
என் தனிமை நேசித்தாய்
திசை மாறிய தென்றல் போல நின்றாய்

பெண் : தடுப்பணை ஏதும் இல்லா
நதி தொடர் நான்தானே
நிராயுதன் உன்னை கண்டு
சற்றே நின்றேனே

பெண் : அடாவடி வாதம் செய்யும்
தடாலடி பெண்தானே
அலாவுதீன் பூதம் போல
அன்பாய் பூத்தேனே

பெண் : வழி தவறிய சோகம்
விரைவினில் அது தீரும்
உன்னை மறந்து
உந்தன் விழிகள் தூங்குமே
ஓ நிழல் உலகம் போதும்
நினை அழைக்கும் காலம்
இருளை விட்டு வெளியே வருவாய் நீயே

ஆண் : வில்லாதி வில்லி
எந்தன் பக்கம் வந்தாய்
தூங்காமல் துப்பறிந்து
தோழி ஆனாய்

குழு : ………………………….

ஆண் : இனிமைகள் ஏதும் இல்லா
துணிகரம் நான்தானே
மனோகரி உந்தன் நட்பில்
மவ்வம் கண்டேனே

ஆண் : அளாவுதல் ஏதுமின்றி
உலா வரும் ஆண்தானே
களேபரகன்னி உந்தன்
பரிவில் சரிந்தேன்னே

ஆண் : தலை மறைகிற என்னில்
குறை உள்ள ஒரு நெஞ்சில்
முதல் முதலாய் மாற்றம் ஒன்று
தோன்றுதே
ஓ தரிக்கெட்ட ஒரு வானம்
தரை இறங்கிடும் நேரம்
அரவணைக்கும் பூமி பாதை நீயே

ஆண் : வில்லாதி வில்லி
எந்தன் பக்கம் வந்தாய்
தூங்காமல் துப்பறிந்து
தோழி ஆனாய்

ஆண் : நஞ்சுள்ள கள்ளன் என்றே
எண்ணம் கொண்டாய்
நெஞ்சுள்ள நல்லன் என்று
கண்டறிந்தாய்

பெண் : வெகு நாளாய் குறி வைத்தேன்
விரல் தடயங்கள் சோதித்தேன்
உன்னை சிறையிட வழிகள் தேடினேன்
ஓ உன் சரிதை வாசித்தேன்
உன் தனிமை நேசித்தேன்
உனக்கென சில கேள்விகள்
பரிசாய் தந்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here