Singers : Abhay Jodhpurkar and Saindhavi Prakash

Music by : Nivas K Prasanna

Male : {Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enayae tholaithen
Mazhayin isai kettu
Maralae thalaiyattu
Malalai mozhi pola
Manadhil oru paattu
Ini neeyum naanum ondraai
Serndhal kadhal irandu ezhuthu} (2)

Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enayae tholaithen

Male : Naan pesaadha mounam ellaam
Unn kangal pesum
Unnai kaanadha neram ennai
Kedikaaram ketkum
Manal medhu thoorum mazhai polavae
Manadhodu neethaan nuzhaindhayadi

Mudhal penthanae neethanae
Ennakull nanae aerpenae
Ini neeyum naanum ondraai
Serndhal kadhal irandu ezhuthu

Female : Oru pennaaga unmel naanae
Peraasai konden
Unnai munnalae paarkkum podhu
Pesamal nindren

Edharkaaga unnai edhirpaarkiren
Enakullae naanum dhinam ketkiren
Inimel naanae neeyaanen
Ivan pinnalae povenae

Ini neeyum naanum ondraai
Serndhal kadhal irandu ezhuthu

Female : Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Male : Penmeen vizhiyil enayae tholaithen
Female : Mazhayin isai kettu
Maralae thalaiyattu
Male : Malalai mozhi pola
Manadhil oru paattu

Male and Female : Ini neeyum naanum ondraai
Serndhal kadhal irandu ezhu
Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enayae tholaithen

பாடகி : சைந்தவி

பாடகா் : அபய் ஜோத்புர்கர்

இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : { விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து } (2)

ஆண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்

ஆண் : நான் பேசாத
மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம்
என்னை கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை
போலவே மனதோடு நீதான்
நுழைந்தாயடி

முதல் பெண்தானே
நீதானே எனக்குள் நானே
ஏற்பேனே இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

பெண் : ஒரு பெண்ணாக
உன் மேல் நானே பேராசை
கொண்டேன் உனை முன்னாலே
பார்க்கும் போது பேசாமல் நின்றேன்

பெண் : எதற்காக உன்னை
எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும்
தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே
நீயானேன் இவன்
பின்னாலே போவேனே

பெண் : இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

பெண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
ஆண் : பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
பெண் : மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
ஆண் : மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு

பெண் & ஆண் :
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here