Singer : S. P. Balasubramanyam

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : ………………

Male : Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal
Imaigalae imaigalae anantha kanneeril nanaiyungal
Intha perinbam yaenindru kelungal
En per solla orr pillai paarungal

Male : Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal

Male : Pesum oru dheivam antha pillaiyallavaa
Pirakkum konji sirikkum kodi mullaiyallavaa
Manivizhi maragatha dheepa adhil oru abhinaya paavam
Iru uyir thazhuviya neram iravinil ezhuthiya kolam
Antha kasthoorimaan thulli vaaraatho
Varum kaalangal nooraandu vaaraatho

Male : Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal

Male : Ennai enthan pillai oru thanthaiyaakkinaan
Haha idhayam adhu muzhuthum inba thenai thekkinaan
Madiyinil avan vilaiyaada manathinil madhu nadhi kooda
Nilavena mugavoli veesa kiliyena oru mozhi pesa
Antha sangeetham naan ketkum naalenru
Andru saainthaadum pallaakku thol ondru

Male : Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal
Imaigalae imaigalae anantha kanneeril nanaiyungal
Intha perinbam yaenindru kelungal
En per solla orr pillai paarungal

Male : Vizhikalae vizhikalae kavithai ondru punaiyungal…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ……………………….

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்
இமைகளே இமைகளே ஆனந்த கண்ணீரில் நனையுங்கள்
இந்த பேரின்பம் ஏனின்று கேளுங்கள்
என் பேர் சொல்ல ஓர் பிள்ளை பாருங்கள்

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்…….

ஆண் : பேசும் ஒரு தெய்வம் அந்த பிள்ளையல்லவா
பிறக்கும் கொஞ்சி சிரிக்கும் கொடி முல்லையல்லவா
மணிவிழி மரகத தீபம் அதில் ஒரு அபிநய பாவம்
இரு உயிர் தழுவிய நேரம் இரவினில் எழுதிய கோலம்
அந்த கஸ்தூரிமான் துள்ளி வாராதோ
வரும் காலங்கள் நூறாண்டு வாராதோ

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்…….

ஆண் : என்னை எந்தன் பிள்ளை ஒரு தந்தையாக்கினான்
ஹஹ இதயம் அது முழுதும் இன்பத் தேனை தேக்கினான்
மடியினில் அவன் விளையாட மனதினில் மதுநதி கூட
நிலவென முகவொளி வீச கிளியென ஒரு மொழி பேச
அந்த சங்கீதம் நான் கேட்கும் நாளென்று
அன்று சாய்ந்தாடும் பல்லாக்கு தோள் ஒன்று

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்
இமைகளே இமைகளே ஆனந்த கண்ணீரில் நனையுங்கள்
இந்த பேரின்பம் ஏனின்று கேளுங்கள்
என் பேர் சொல்ல ஓர் பிள்ளை பாருஙகள்

ஆண் : விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here