Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Vaali

Male : Vizhiyaal kaadhal kadidham
Female : Varaindhaal aasai amudham
Male : Vanna solaiyil maalaiyil paarkka
Female : Ho ho Male : Hmm
Female : Chinna poonguyil paadalai ketkka
Male : Hahahaha

Both : Vizhiyaal kaadhal kadidham
Varaindhaal aasai amudham
Vanna solaiyil maalaiyil paarkka
Chinna poonguyil paadalai ketkka

Male : Pani pol paarvai minna
Kani pol vaarthai sonna
Pani pol paarvai minna
Kani pol vaarthai sonna
Silai mael kaadhal konden
Siripil kavidhai kanden

Female : Idhudhaan maalai mayakkam
Irukkum vaazhum varaikkum
Idhudhaan maalai mayakkam
Irukkum vaazhum varaikkum
Edhudhaan uravin ellai
Endraal vaarthai illai

Male : Kan mel Female : Nadanthen
Male : Kai mel Female : Kidandhen
Male : Malar pol Female : Malarndhen
Male : Madi mel Female : Vizhundhen
Both : Kulir neeradalaam

Both : Vizhiyaal kaadhal akdidham
Varaindhaal aasai amudham
Vanna solaiyil maalaiyil paarkka
Chinna poonguyil paadalai ketkka

Male : Medhuvaai maeni anaikka
Pudhidhaai paadam padikka
Idhazhaal thaagam thaniya
Irukkum mogam kaniya

Female : Mudhalil naanam thadukkum
Mugathai moodi muraikkum
Manadhil aaval pirakkum
Mudivil vaari kodukkum

Male : Vetkam Female : Maraiyum
Male : Sorgam Female : Puriyum
Male : Paadhai Female : Theriyum
Male : Payanam Female : Thodarum
Both : Parandhae odalaam

Both : Vizhiyaal kaadhal akdidham
Varaindhaal aasai amudham
Vanna solaiyil maalaiyil paarkka
Chinna poonguyil paadalai ketkka

Both : Ahaa ahaa ahaaa..hoho hoho hoho

பாடகர்கள் :  டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : விழியால் காதல் கடிதம்
பெண் : வரைந்தாள் ஆசை அமுதம்
ஆண் : வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
பெண் : ஹோ ஹோ ஆண் : ஹ்ம்
பெண் : சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க

இருவர் : விழியால் காதல் கடிதம்
வரைந்தாள் ஆசை அமுதம்
வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க

ஆண் : பனி போல் பார்வை மின்ன
கனி போல் வார்த்தை சொன்ன
பனி போல் பார்வை மின்ன
கனி போல் வார்த்தை சொன்ன
சிலை மேல் காதல் கொண்டேன்
சிரிப்பில் கவிதை கண்டேன்

பெண் : இதுதான் மாலை மயக்கம்
இருக்கும் வாழும் வரைக்கும்
இதுதான் மாலை மயக்கம்
இருக்கும் வாழும் வரைக்கும்
எதுதான் உறவின் எல்லை
என்றால் வார்த்தை இல்லை

ஆண் : கண் மேல்……..பெண் : நடந்தேன்
ஆண் : கை மேல்…….பெண் : கிடந்தேன்
ஆண் : மலர் போல்……..பெண் : மலர்ந்தேன்
ஆண் : மடி மேல்…….பெண் : விழுந்தேன்
இருவர் : குளிர் நீராடலாம்

இருவர் : விழியால் காதல் கடிதம்
வரைந்தாள் ஆசை அமுதம்
வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க

ஆண் : மெதுவாய் மேனி அணைக்க
புதிதாய்ப் பாடம் படிக்க
இதழால் தாகம் கனிய
இருக்கும் மோகம் தணிய

பெண் : முதலில் நாணம் தடுக்கும்
முகத்தை மூடி மறைக்கும்
மனதில் ஆவல் பிறக்கும்
முடிவில் வாரிக் கொடுக்கும்

ஆண் : வெட்கம்………பெண் : மறையும்
ஆண் : சொர்க்கம்……..பெண் : புரியும்
ஆண் : பாதை……….பெண் : தெரியும்
ஆண் : பயணம்……..பெண் : தொடரும்….
இருவர் : பறந்தே ஓடலாம்

இருவர் : விழியால் காதல் கடிதம்
வரைந்தாள் ஆசை அமுதம்
வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க
சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க

இருவர் : ஆஹா ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here