Singer : Ashwin Sharma

Music by : D. Imman

Male : Vizhuvathum ezhuvathum
Thaanada vaazhkaiyae
Ezhumvarai idhayathil
Vendumae vetkayae

Male : Vazhithunayaai ival nesam thaan
Pothum pothumae
Vizhigalin oraththu eerangal
Kaainthu pogumae

Male : Urangida oru madi irukkirathu
Endrumae
Unakkena anudhinam thudikkirathu
Nenjamae

Male : Koodaiyil koodaiyil
Thoovidum megam pola
Koodavae koodavae
Dhevathai nizhal varum

Male : Raathiri paadhaiyil
Veesidum velicham pola
Kaadhalan kaavalan
Aarudhal vazhi tharum

Male : Haa…aaa….aaa…..aaa…
Aaaaa…ra…raaaa…aaa…aaa…

Male : Vizhuvathum ezhuvathum
Thaanada vaazhkaiyae
Ezhumvarai idhayathil
Vendumae vetkayae

Male : Erimalai therippena seerivaa
Saambal aakkalaam
Ethiriyin padaigalai theeramai modhi
Saaikkalaam

Male : Sarithiram muzhuvathum
Jeyithavargal yaaradaa
Thadaigalai thurumbena
Mathithavargal thaanada

Male : Soorayaai modhiyae
Porilae vaagai soodu
Yelanam seidhavar
Paarthida padhil kodu

Male : Kaigalae aayutham
Kaalathai sondham aakku
Naanilam thaandiyum
Anjida nadanthidu

Male : Vizhuvathum ezhuvathum
Thaanada vaazhkaiyae
Ezhumvarai idhayathil
Vendumae vetkayae

பாடகர் : அஸ்வின் ஷர்மா

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : விழுவதும் எழுவதும்
தானடா வாழ்கையே
எழும்வரை இதயத்தில்
வேண்டுமே வேட்கையே

ஆண் : வழித்துணையாய் இவள் நேசம்தான்
போதும் போதுமே
விழிகளின் ஓரத்து ஈரங்கள்
காய்ந்து போகுமே

ஆண் : உறங்கிட ஒரு மடி இருக்கிறது
என்றுமே
உனக்கென அனுதினம் துடிக்கிறது
நெஞ்சமே

ஆண் : கூடையில் கூடையில்
தூவிடும் மேகம் போல
கூடவே கூடவே
தேவதை நிழல் வரும்

ஆண் : ராத்திரி பாதையில்
வீசிடும் வெளிச்சம் போல
காதலன் காவலன்
ஆறுதல் வழி தரும்

ஆண் : ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆஆ…..ர…..ரா……ஆஅ….ஆஅ….

ஆண் : விழுவதும் எழுவதும்
தானடா வாழ்கையே
எழும்வரை இதயத்தில்
வேண்டுமே வேட்கையே

ஆண் : எரிமலை தெறிப்பென சீறிவா
சாம்பல் ஆக்கலாம்
எதிரியின் படைகளை தீரமாய் மோதி
சாய்க்கலாம்

ஆண் : சரித்திரம் முழுவதும்
ஜெயித்தவர்கள் யாரடா
தடைகளை துரும்பென
மதித்தவர்கள் தானடா

ஆண் : சூறையாய் மோதியே
போரிலே வாகை சூடு
ஏளனம் செய்தவர்
பார்த்திட பதில் கொடு

ஆண் : கைகளே ஆயுதம்
காலத்தை சொந்தம் ஆக்கு
நானிலம் தாண்டியும்
அஞ்சிட நடந்திடு

ஆண் : விழுவதும் எழுவதும்
தானடா வாழ்கையே
எழும்வரை இதயத்தில்
வேண்டுமே வேட்கையே…..ஏ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here