Singers : Shakshi Harendran and Anandhi

Music by : Theeson

Lyrics by : Vivek

Male : Yaana mutta kaambula
Nava pazham karuvula
Naththa kutti kaaththula
Aama kunju maraththula

Both : Thangam alaiyila
Singam valaiyila
Seeni malaiyila
Yeri nikkaiyila

Both : Meenu karaiyila
Maanu kadalula
Kaaththa pudikkirom
Kanda kanavula

Both : Unna killi yenna killi
Ooda thanni ooduthe
Santhosama santhosama
Ootha kili paaduthe

Male : Heyyy eyyyy..

Male : Mothira veralil mothura kannukku
Thadayam ethuvum kaanaliye
Mangala kayiththa maattatha kazhuththu
Urava innum seraliye

Male : Kannula manthanam
Illatha rendukkum
Kalyanam innum aagaliye
Thottu thottu pesum
Orasal edhuvum illa
Vittu vittu paarakum
Sarasam edhuvum illa

Male : Hey kamadeven thodutha
Kanaiyum pozhiyavilla
Kadhal jodi kaana
Amsam theriyavilla

Male : Medu palla vaazhakaiyila
Yegappatta thappirukkum
Kaaththu nikka natpirukkum
Appan pola natpunga

Male : Maanudaththa vaika vaazha
Aandavane thantha varam
Paalinatha thaandi varum
Namma uyir natpunga

Male : Ellorukkum peiyum mazhai
Engal mannil veezhume
Anbin kannil kuraiyillai niraikudame
Mukkaal nila illa vittaal
Pizhai alla vaaname
Ange pirai rasippathu engal guname

Male : Kannukkettum thoorame
Unnai irul soozhume
Chinnap pori pothume
Vidiyum ellaame

Male : Uchik kizhi kaahangal
Mettuk kaati paadinaal
Mechik kuyil aakkume
Ulagam thannale

Male : Neeyum our baagamthaan
Naanum our baagamthaan
Anbil vazhi sernthathe
Manangal ellame

Male : Sinthiya rathththathil raththina kambalam
Seythida paarkkuthu paadhangale

Male : Sinthiya rathththathil raththina kambalam
Seythida paarkkuthu paadhangale

Male : Panthaya oottaththil pakkaththil ullavan
Kaigalai korkuthu paasangale

Male : Hey eyyy eyy ……

பாடகர்கள் : சாக்க்ஷி ஹரேந்திரன் மற்றும் ஆனந்தி

இசை அமைப்பாளர் : தீசன்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : யானை முட்ட காம்புல
நவா பழம் கருவில
நத்த குட்டி காத்துல
ஆம குஞ்சு மரத்துல

இருவர் : தங்கம் அலையில
சிங்கம் வலையில
சீனி மலையில
ஏறி நிக்கையில

இருவர் : மீனு கரையில
மானு கடலுல
காத்த புடிக்கிறோம்
கண்ட கனவுல

இருவர் : உன்ன கிள்ளி என்ன கிள்ளி
ஓட தண்ணி ஓடுதே
சந்தோஷமா சந்தோஷமா
ஊதா கிளி பாடுதே

ஆண் : ஹே …ஏ …

ஆண் : மோதிர விரலில் மோதுற கண்ணுக்கு
தடயம் எதுவும் காணலியே
மங்கள கயித்த மாட்டாத கழுத்து
உறவ இன்னும் சேரலியே

ஆண் : கண்ணுல மந்தனம்
இல்லதா ரெண்டுக்கும்
கல்யாணம் இன்னும் ஆகலியே
தொட்டு தொட்டு பேசும்
ஓரசல் எதுவும் இல்ல
விட்டு விட்டு பறக்கும்
சரசம் எதுவும் இல்ல

ஆண் : காமதேவன் தொடுத்த
கணையும் பொழியவில்லை
காதல் ஜோடி காண
அம்சம் தெரியவில்ல

ஆண் : மேடு பள்ள வாழ்க்கையில
ஏகப்பட்ட தப்பிருக்கும்
காத்து நிக்க நட்பிருக்கும்
அப்பன் போல நட்புங்க

ஆண் : மானுடத்த வாழ வைக்க
ஆண்டவனே தந்த வரம்
பாலினித்த தாண்டி வரும்
நம்ம உயிர் நட்புங்க

ஆண் : எல்லோருக்கும் பெய்யும் மழை
எங்கள் மண்ணில் வீழுமே
அன்பின் கண்ணில் குறையில்லை
நிறைகுடமே
முக்கால் நிலா இல்லா விட்டால்
பிள்ளை அல்லா வானமே
அங்கே பிறை ரசிப்பது எங்கள் குணமே

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரமே
உன்னை இருள் சூழுமே
சின்னப் பொறி போதுமே
விடியும் எல்லாமே

ஆண் : உச்சிக் கிளை காயங்கள்
மெட்டுக் கட்டி பாடினால்
மெச்சிக் குயில் ஆக்குமே
உலகம் தன்னாலே

ஆண் : நீயும் ஒரு பாகம்தான்
நானும் ஒரு பாகம்தான்
அன்பில் வழி சேர்ந்தே
மணங்கள் எல்லாமே

ஆண் : சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம்
செய்திட பார்க்குது பாதங்களே

ஆண் : சிந்திய ரத்தத்தில் ரத்தின கம்பளம்
செய்திட பார்க்குது பாதங்களே

ஆண் : பந்தய ஓட்டத்தில் பக்கத்தில் உள்ளவன்
கைகளை கோர்க்குது பாசங்களே

ஆண் : ஹே ..ஏ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here