Singer : T. M. Soundararajan

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Male : Aa…..aaha….aa… oo….oohho ho…..
Chorus : Ahaa ahaa aahaa…..

Male : Yaanaiyin balam edhilae thumbikkaiyilae
Manithanoda balam edhilae thumbikkaiyilae

Male : Yaanaiyin balam edhilae
Chorus : Thumbikkaiyilae
Male : Manithanoda balam edhilae
Chorus : Thumbikkaiyilae

Chorus : Nampikkaithaan vilakku
Iru kann izhantha namakku
Male : Nampikkaithaan vilakku
Iru kann izhantha namakku

Male and Chorus :
Yaanaiyin palam edhilae thumbikkaiyilae
Manithanoda palam edhilae thumbikkaiyilae

Male : Aadhi manithan kadalai kandu
Payanthathum undu
Aduththu vantha manithan konjam
Thuninthathum undu

Chorus : Antha nampikkaithaan vilakku
Iru kann izhantha namakku

Male : Yaanaiyin balam edhilae
Chorus : Thumbikkaiyilae
Male : Manithanoda balam edhilae
Chorus : Thumbikkaiyilae

Male : Kangal paarkkavillai endraal
Idhayam paarkkattum
Nammai kadavul paarkkavillai endraal
Kaalam paarkkattum

Male : Moondru kangal kadavulukku
Vanthathillaiy
Antha moondraavathu kann
Namm manathil illaiyo

Male and Chorus :
Yaanaiyin palam edhilae thumbikkaiyilae
Manithanoda palam edhilae thumbikkaiyilae

Chorus : Paavaththirkku thandanaiyaa
Paarvai ponathu
Male : Kann paarvai ulla manithar thaanae
Paavam seivathu

Male : Yaettra thaazhvai maruppatharkko
Gurudar aanathu
Chorus : Namm ellorukkum engirunthu
Uravu vanthathu

Male and Chorus :
Yaanaiyin palam edhilae thumbikkaiyilae
Manithanoda palam edhilae thumbikkaiyilae

Male : Aduththavanai koduppavargal
Arivu gurudargal petra
Annaiyaiyum marappavargal
Anbu gurudargal

Male : Anaiththavanai veruppavargal
Nandri gurudargal

Chorus : Naam aandavaanaal padaikkappatta
Piravi gurudargal
Naam aandavanaal padaikkappatta
Piravi gurudargal….

Chorus : Nampikkaithaan vilakku
Iru kann izhantha namakku
Male : Nampikkaithaan vilakku
Iru kann izhantha namakku

Chorus : Nampikkaithaan vilakku
Iru kann izhantha namakku
Male : Nampikkaithaan vilakku
Iru kann izhantha namakku

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆ…….அஹ…..ஆ….ஓ…..ஓஹ்ஹோ ஹோ……
குழு : அஹா அஹா ஆஹா

ஆண் : யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே

ஆண் : யானையின் பலம் எதிலே
குழு : தும்பிக்கையிலே
ஆண் : மனிதனோட பலம் எதிலே
குழு : நம்பிக்கையிலே

குழு : நம்பிக்கை தான் விளக்கு
இரு கண் இழந்த நமக்கு
ஆண் : நம்பிக்கை தான் விளக்கு
இரு கண் இழந்த நமக்கு

ஆண் மற்றும் குழு :
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே

ஆண் : ஆதி மனிதன் கடலை கண்டு
பயந்ததும் உண்டு
அடுத்து வந்த மனிதன் கொஞ்சம்
துணிந்ததும் உண்டு

ஆண் : பயந்து போன மனிதன் அந்த
கரையிலே நின்றான்
துணிந்தவனோ படகு கட்டி
கடலையும் வென்றான்

குழு : அந்த நம்பிக்கை தான் விளக்கு
இரு கண் இழந்த நமக்கு

ஆண் : யானையின் பலம் எதிலே
குழு : தும்பிக்கையிலே
ஆண் : மனிதனோட பலம் எதிலே
குழு : நம்பிக்கையிலே

ஆண் : கண்கள் பார்க்கவில்லை என்றால்
இதயம் பார்க்கட்டும்
நம்மை கடவுள் பார்க்கவில்லை என்றால்
காலம் பார்க்கட்டும்

ஆண் : மூன்று கண்கள் கடவுளுக்கு
வந்ததில்லையோ அந்த
மூன்றாவது கண் நம்
மனதில் இல்லையோ……

ஆண் மற்றும் குழு :
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே

குழு : பாவத்திற்கு தண்டனையா
பார்வை போனது
ஆண் : கண் பார்வை உள்ள மனிதர் தானே
பாவம் செய்வது…

ஆண் : ஏற்ற தாழ்வை மறப்பதர்க்கோ
குருடர் ஆனது
குழு : நம் எல்லோருக்கும் எங்கிருந்து
உறவு வந்தது…..

ஆண் மற்றும் குழு :
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே

ஆண் : அடுத்தவனை கெடுப்பவர்கள்
அறிவு குருடர்கள் பெற்ற
அன்னையையும் மறப்பவர்கள்
அன்பு குருடர்கள்

ஆண் : அணைத்தவனை வெறுப்பவர்கள்
நன்றி குருடர்கள்

குழு : நாம் ஆண்டவனால் படைக்கப்பட்ட
பிறவி குருடர்கள்
நாம் ஆண்டவனால் படைக்கப்பட்ட
பிறவி குருடர்கள்…..

ஆண் மற்றும் குழு :
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே

குழு : நம்பிக்கை தான் விளக்கு
இரு கண் இழந்த நமக்கு
ஆண் : நம்பிக்கை தான் விளக்கு
இரு கண் இழந்த நமக்கு

குழு : நம்பிக்கை தான் விளக்கு
இரு கண் இழந்த நமக்கு
நம்பிக்கை தான் விளக்கு
இரு கண் இழந்த நமக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here