Singer : Mohammad Irfan Ali

Music by : G.V. Prakash Kumar

Male : Yaar aval yaaro
Aval yaaro kanaa thaano
Yaro nilaa thaano
Vidaiyillaa vinaa thaano

Male : Vaanin pulam thaandi
Nilam theendum mazhai thaano
Naalum aval illai
Enil ingae pizhai thaano

Male : Un maar meedhum
Thozh meedhum
Naan thoonginen
Uyir ingeyae pogattum
Endrenginen
Karaigalae illaa nadhi
Orae oru nadhi

Whistling : ………….

Chorus : Heyyeah….
Heyyeahh…
Heyyeah…hmmmmmm..

Heyyeah….
Heyyeahh…
Heyyeah…heyyeahhhh..

Chorus : ……………

Male : Orr aagaya dhooram
Naan pogindra podhum
En pakkathil nirpaal aval

Male : Naan veezhgindra neram
Pon kai rendum neelum
Than kakkathil vaipaal aval

Male : Naan kaalai pani
Nee pullin nuni
Naan veezhaamal
Nee thaanginaai
Naan kelaa oli
Nee thaanae mozhi
En osaikku
Porul aagiraai oh ho ..
Hooo…hoooo….

Male : Yaar aval yaaro
Aval yaaro kanaa thaano
Yaaro nilaa thaano
Vidaiyillaa vinaa thaano

Male : Naan thoongaatha podhum
En thunbathin podhum
En annai pol kaathaai enai

Male : Pon vaan engum neeyae
Vinmeenaagindraayae
Naan anaanthu paarppen unai

Male : Naan ketkum varam
En vaazh naal thavam
Un anbandri verethadi
Oh paaraa mugam
Nee kaattum kanam
Naan kooraamal
Saavenadi oh ho ….
Hoooo….hooooo…hooo….

Male : Yaar aval yaaro
Aval yaaro kanaa thaano
Yaaro nilaa thaano
Vidaiyillaa vinaa thaano

Male : Vaanin pulam thaandi
Nilam theendum mazhai thaano
Naalum aval illai
Enil ingae pizhai thaano

Male : Un maar meedhum
Thozh meedhum
Naan thoonginen
Uyir ingeyae pogattum
Endrenginen
Karaigalae illaa nadhi
Orae oru nadhi

Male : Aaahaaaaa……
………………………

பாடகா் : முஹம்மத் இா்பான் அலி

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : யாா் அவள்
யாரோ அவள் யாரோ
கனா தானோ யாரோ
நிலா தானோ விடையில்லா
வினா தானோ

ஆண் : வானின் புலம்
தாண்டி நிலம் தீண்டும்
மழை தானோ நாளும்
அவள் இல்லை எனில்
இங்கே பிழைதானோ

ஆண் : உன் மாா்
மீதும் தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிா் இங்கேயே
போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஒரே ஒரு நதி

விஷ்லிங் : ………………………
குழு : ………………………………

ஆண் : ஓா் ஆகாய
தூரம் நான் போகின்ற
போதும் என் பக்கத்தில்
நிற்பாள் அவள்

ஆண் : நான் வீழ்கின்ற
நேரம் பொன் கை ரெண்டும்
நீளும் தன் கக்கத்தில்
வைப்பாள் அவள்

ஆண் : நான் காலைப்
பனி நீ புல்லின் நுனி
நான் வீழாமல் நீ
தாங்கினாய் நான்
கேளா ஒலி நீதானே
மொழி என் ஓசைக்கு
பொருளாகிறாய்
ஓஹோ ஹோ …

ஆண் : யாா் அவள்
யாரோ அவள் யாரோ
கனா தானோ யாரோ
நிலா தானோ விடையில்லா
வினா தானோ

ஆண் : நான் தூங்காத
போதும் என் துன்பத்தின்
போதும் என் அன்னை
போல் காத்தாய் எனை

ஆண் : பொன் வான்
எங்கும் நீயே விண்மீன்
ஆகின்றாயே நான்
அண்ணாந்து பாா்ப்பேன்
உனை

ஆண் : நான் கேட்கும்
வரம் என் வாழ்நாள்
தவம் உன் அன்பன்றி
வேறேதடி ஓ பாரா முகம்
நீ காட்டும் கணம் நான்
கூறாமல் சாவேனடி
ஓஹோ ஹோ …

ஆண் : யாா் அவள்
யாரோ அவள் யாரோ
கனா தானோ யாரோ
நிலா தானோ விடையில்லா
வினா தானோ

ஆண் : வானின் புலம்
தாண்டி நிலம் தீண்டும்
மழை தானோ நாளும்
அவள் இல்லை எனில்
இங்கே பிழைதானோ

ஆண் : உன் மாா்
மீதும் தோள் மீதும்
நான் தூங்கினேன்
உயிா் இங்கேயே
போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி
ஒரே ஒரு நதி

ஆண் : ……………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here