Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Yaar enna sonnaar yaenintha kobam
Yaar enna sonnaar yaenintha kobam
Nee konda mounam naan seitha paavam
Yaar enna sonnaar yaenintha kobam
Nee konda mounam naan seitha paavam
Male : Thaer munbu sella sillai pinbu sendraal
Oorkolam endru pero
Thindaadum idai kondaadum enai
Kandodum nilaiyaatho
Male : Sriranganaathan paarkumpothu
Kovilil illai sridevi maadhu
Sriranganaathan paarkumpothu
Kovilil illai sridevi maadhu
Sri raman munnae vaithegi pinnae
Idam maara nernthaal parithaabam parithaabam
Male : Yaar enna sonnaar yaenintha kobam
Nee konda mounam naan seitha paavam
Male : Antha naalil vanji konda
Aasai maara kandean
Intha naalil penmai yaeno
Vesham poda kandaen
Male : Nilladi konjam vedhanai pothum
Solladi kannae sodhanai pothum
Nilladi konjam vedhanai pothum
Solladi kannae sodhanai pothum
Ikkarai meedhu yaengugindraenae
Akkarai illaiyo parithaabam parithaabam
Male : Yaar enna sonnaar yaenintha kobam
Nee konda mounam naan seitha paavam
Male : Kaaveri vellam karai meeri ponaal
Nanjaigalin kathi ennavo
Kannaana ullam punnaagumaanaal
Kadhal pogum thisai ennavo
Male : Pooppondra penmai porkalamaanaal
Menmaiyum illai nanmaiyum illai
Pooppondra penmai porkalamaanaal
Menmaiyum illai nanmaiyum illai
Kallaaga neeyum kaniyaaga naanum
Yaen vaazha vendum parithaabam parithaabam
Male : Yaar enna sonnaar yaenintha kobam
Nee konda mounam naan seitha paavam
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்
யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்
நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்
யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்
நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்
ஆண் : தேர் முன்பு செல்ல சிலை பின்பு சென்றால்
ஊர்கோலம் என்று பேரோ
திண்டாடும் இடை கொண்டாடும் எனை
கண்டோடும் நிலையாதோ
ஆண் : ஸ்ரீரங்கநாதன் பார்க்கும்போது
கோவிலில் இல்லை ஸ்ரீதேவி மாது
ஸ்ரீரங்கநாதன் பார்க்கும்போது
கோவிலில் இல்லை ஸ்ரீதேவி மாது
ஸ்ரீராமன் முன்னே வைதேகி பின்னே
இடம் மாற நேர்ந்தால் பரிதாபம் பரிதாபம்
ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்
நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்
ஆண் : அந்த நாளில் வஞ்சி கொண்ட
ஆசை மாறக் கண்டேன்
இந்த நாளில் பெண்மை ஏனோ
வேஷம் போடக் கண்டேன்
ஆண் : நில்லடி கொஞ்சம் வேதனை போதும்
சொல்லடி கண்ணே சோதனை போதும்
நில்லடி கொஞ்சம் வேதனை போதும்
சொல்லடி கண்ணே சோதனை போதும்
இக்கரை மீது ஏங்குகின்றேனே
அக்கைறை இல்லையோ பரிதாபம் பரிதாபம்
ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்
நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்
ஆண் : காவேரி வெள்ளம் கரை மீறி போனால்
நஞ்சைகளின் கதி என்னவோ
கண்ணான உள்ளம் புண்ணாகுமானால்
காதல் போகும் திசை என்னவோ
ஆண் : பூப்போன்ற பெண்மை போர்க்களமானால்
மென்மையும் இல்லை நன்மையையும் இல்லை
பூப்போன்ற பெண்மை போர்க்களமானால்
மென்மையும் இல்லை நன்மையையும் இல்லை
கல்லாக நீயும் கனியாக நானும்
ஏன் வாழ வேண்டும் பரிதாபம் பரிதாபம்
ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம்
நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்