Singers : Priya Himesh and Karthik

Music by : Ilayaraja

Chorus : Heyyyeyyy heheyyyyyy
Heyyyeyyy hehe
Heyyyeyyy heheyyyyyy
Heyyyeyyy hehe
Hoo hoo hoo hooo hoo hooo
Hoo hoo hoo hooo hoo hooo

Male : Yaar indha velvettu kavidhai
En nenjil poo kottum paravai

Female : Mogathil min vettum kanavae
Or mutham kettadhu iravae

Male : Nee manjal megamaai
Ennaiyae modhinaai

Female : Nee mutha thooralai
Kettu kondaadinaai

Male : Tulip poovellaam
Thee vaikkum raavellaam

Male : Yaar indha velvettu kavidhai
Female : En nenjil poo kottum paravai

Male : Dhegam enna idhu dhegam
Thaenil neidhadho
En thaedal kondadho
Senthaenil neidhadho
Ilam thaedal kondadho

Female : Nenjil soodi varum mogam
Enna mogamo
Idhu raaja raagamo

Male : Oru minmini idhu kanmani
Adhil kalandhadhu un ullam

Female : Dhinam andhiyil mana thandhiyil
Unai isaikkudhu en nenjam

Male : Koondhal enbadhu mullai kaadu
Tholgal enbadhu moongil veedu
Ival oru ilamaiyin dhiraviyamae

Male : Yaar indha velvettu kavidhai
En nenjil poo kottum paravai

Female : Neeyum naanum andhi maalai
Megamaagalaam
Pala vannam maaralaam
Ven megamaagalaam
Pala vannam maaralaam

Male : Hae… innum innum
Vegu neram
Konji paarkkalaam
Kai korthu pogalaam

Female : Idhu maiyalaa sudum veiyilaa
Kudai pidithadhu un kaigal

Male : Adi vennilaa kodi minnalaa
Idai ilaithadhu maayangal

Female : Boomi enbadhae chinna pulli
Kaadhal vaanilum perai cholli
Idhayamum idhayamum inaigiradhae

Male : Yaar indha velvettu kavidhai
Female : En nenjil poo kottum paravai

Male : Nee manjal megamaai
Ennaiyae modhinaai

Female : Nee mutha thooralai
Kettu kondaadinaai

Male : Tulip poovellaam
Thee vaikkum raavellaam

Male : Yaar indha velvettu kavidhai
Female : En nenjil poo kottum paravai

பாடகர்கள் : பிரியா ஹிமேஷ் மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹெய்ய்யேய்ய் ஹேஹேய்ய்ய்ய்
ஹெய்ய்யேய்ய் ஹேஹே
ஹெய்ய்யேய்ய் ஹேஹேய்ய்ய்ய்
ஹெய்ய்யேய்ய் ஹேஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை

பெண் : மோகத்தில் மின் வெட்டும் கனவே
ஓர் முத்தம் கேட்டது இரவே

ஆண் : நீ மஞ்சள் மேகமாய்
என்னையே மோதினாய்

பெண் : நீ முத்தத் தூரலை
கேட்டுக் கொண்டாடினாய்

ஆண் : துலிப் பூவெல்லாம்
தீ வைக்கும் ராவெல்லாம்

ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
பெண் : என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை

ஆண் : தேகம் என்ன இது தேகம்
தேனில் நெய்ததோ
என் தேடல் கொண்டதோ
செந்தேனில் நெய்ததோ
இளம் தேடல் கொண்டதோ

பெண் : நெஞ்சில் சூடி வரும் மோகம்
என்ன மோகமோ
இது ராஜ ராகமோ

ஆண் : ஒரு மின்மினி இது கண்மணி
அதில் கலந்தது உன் உள்ளம்

பெண் : தினம் அந்தியில் மனத் தந்தியில்
உனை இசைக்குது என் நெஞ்சம்

ஆண் : கூந்தல் என்பது முல்லைக் காடு
தோள்கள் என்பது மூங்கில் வீடு
இவள் ஒரு இளமையின் திரவியமே

ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை

பெண் : நீயும் நானும் அந்தி மாலை
மேகமாகலாம்
பல வண்ணம் மாறலாம்
வெண் மேகமாகலாம்
பல வண்ணம் மாறலாம்

ஆண் : ஹே… இன்னும் இன்னும்
வெகு நேரம்
கொஞ்சிப் பார்க்கலாம்
கை கோர்த்து பூக்களாம்

பெண் : இது மையலா சுடும் வெய்யிலா
குடை பிடித்தது உன் கைகள்

ஆண் : அடி வெண்ணிலா கொடி மின்னலா
இடை இளைத்தது மாயங்கள்

பெண் : பூமி என்பதே சின்னப் புள்ளி
காதல் வானிலும் பேரைச் சொல்லி
இதயமும் இதயமும் இணைகிறதே

ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
பெண் : என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை

ஆண் : நீ மஞ்சள் மேகமாய்
என்னையே மோதினாய்

பெண் : நீ முத்தத் தூரலை
கேட்டுக் கொண்டாடினாய்

ஆண் : துலிப் பூவெல்லாம்
தீ வைக்கும் ராவெல்லாம்

ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை
பெண் : என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here