Singer : K. S. Chitra
Music by : Devendran
Female : Yaar veettu roja intha raja
Kaiyil naalae yaenthum pudhu roja
Yaar annai yaar thanthai adhuthaanae vinthai
Sontham edhuvena solvaayadaa
Female : Pudhirae….vaa kaalai kadhirae….vaa
Dheivam thantha sontham pantham neeyae
Kurunagai purinthidum ilam piraiyo
Female : Yaar veettu roja intha raja….
Female : Yaaro oru thaai madiyil pooththa vantha mullai
Paavam athai vaaimozhiya arinthidaatha pillai
Yaar manam yaar vasam yaar solla koodum
Unmaiyum oomaiyaai aanathu yaeno
Female : Uchchi mazhayil thanneer vellam pirakkum
Vanga kaalil thaanae vanthu kalakkum
Adhil naan maghizhnthida thaanae
Indru innoru sangamam aachchu
Female : Kaiyil nee thavazhnthidaththaanae
Enthan thunbamum thukkamum pochu
Nanthavanathinil vanthu sirikira
Poovae maghizham poove
Unnai anaiththida
Alli eduththida naan mayanga
Female : Yaar veettu roja intha raja
Kaiyil naalae yaenthum pudhu roja
Yaar annai yaar thanthai adhuthaanae vinthai
Sontham edhuvena solvaayadaa
Female : Thendral iru kaal mulaiththu
Thavazhnthu vanthathenna
Minnal iru kann malarnthu
Mazhalai solvathenna
Inbamae unnai naan thottalil pottu
Aariro endru naan paadanum paattu
Female : Sangai eduththu paalai ootti viduven
Thanga sathangai kaalil mattividuvaen
Oru maamara kuyil pole
Intha mandrathithil nee vanthu koova
Female : Ila thaamarai kodi polae
Enthan tholgalil nee vanthu thaavaa
Alli iraiththidum kalla siripporu
Veenai pesum veenai
Kannam sivanthida muththam padhikkaiyil naan uruga
Female : Yaar veettu roja intha raja
Kaiyil naalae yaenthum pudhu roja
Yaar annai yaar thanthai adhuthaanae vinthai
Sontham edhuvena solvaayadaa
Female : Pudhirae….vaa kaalai kadhirae….vaa
Dheivam thantha sontham pantham neeyae
Kurunagai purinthidum ilam piraiyo
Female : Yaar veettu roja intha raja….
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா
கையில் நானே ஏந்தும் புது ரோஜா
யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை
சொந்தம் எதுவென சொல்வாயடா
பெண் : புதிரே…..வா காலைக் கதிரே…..வா
தெய்வம் தந்த சொந்தம் பந்தம் நீயோ
குறுநகை புரிந்திடும் இளம் பிறையோ
பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா
பெண் : யாரோ ஒரு தாய் மடியில் பூத்த வந்த முல்லை
பாவம் அதை வாய்மொழிய அறிந்திடாத பிள்ளை
யார் மனம் யார் வசம் யார் சொல்லக் கூடும்
உண்மையும் ஊமையாய் ஆனது ஏனோ
பெண் : உச்சி மலையில் தண்ணீர் வெள்ளம் பிறக்கும்
வங்கக் கடலில் தானே வந்து கலக்கும்
அதில் நான் மகிழ்ந்திட தானே
இன்று இன்னொரு சங்கமம் ஆச்சு
பெண் : கையில் நீ தவழ்ந்திடத்தானே
எந்தன் துன்பமும் துக்கமும் போச்சு
நந்தவனத்தினில் வந்து சிரிக்கிற
பூவே மகிழம் பூவே
உன்னை அணைத்திட
அள்ளி எடுத்திட நான் மயங்க
பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா
கையில் நானே ஏந்தும் புது ரோஜா
யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை
சொந்தம் எதுவென சொல்வாயடா
பெண் : தென்றல் இரு கால் முளைத்து
தவழ்ந்து வந்ததென்ன
மின்னல் இரு கண் மலர்ந்து
மழலை சொல்வதென்ன
இன்பமே உன்னை நான் தொட்டிலில் போட்டு
ஆரிரோ என்று நான் பாடணும் பாட்டு
பெண் : சங்கை எடுத்து பாலை ஊட்டி விடுவேன்
தங்க சதங்கை காலில் மாட்டிவிடுவேன்
ஒரு மாமரக் குயில் போலே
இந்த மன்றத்தில் நீ வந்து கூவ
பெண் : இளந்தாமரைக் கொடி போலே
எந்தன் தோள்களில் நீ வந்து தாவ
அள்ளி இறைத்திடும் கள்ளச் சிரிப்பொரு
வீணை பேசும் வீணை
கன்னம் சிவந்திட முத்தம் பதிக்கையில் நான் உருக
பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா
கையில் நானே ஏந்தும் புது ரோஜா
யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை
சொந்தம் எதுவென சொல்வாயடா
பெண் : புதிரே…..வா காலைக் கதிரே…..வா
தெய்வம் தந்த சொந்தம் பந்தம் நீயோ
குறுநகை புரிந்திடும் இளம் பிறையோ
பெண் : யார் வீட்டு ரோஜா இந்த ராஜா…