Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Chorus : ………………………….

Male : Yaar yaaro enakku potti
Naan vandhen kodiyai naatti
Female : Ilaiyavan iniyavan isaiyilae
Yevarumae mayanguvaar sabaiyilae

Male : Yaar yaaro enakku potti

Male : Surangalai pidithu
Layangalil thoduthu
Sugangalai kodukka therindhavan
Kalaigalai ninaithu kalavalaiyai marandhu
Siragugal virithu parandhavan

Female : Idhayam malarndhu vida
Ninaivil ezhundhu varum
Pudhiya nilavae
Iravil urangi vidum
Vizhiyil valarndhu varum
Iniya kanavae

Male : Paadaadha paattellaam
Naan paaduven hae
Vaangaadha perellaam naan vaanguven
Pugazh enum vaanil naan kadhiravan

Female : Yaar yaaro enakku potti

Chorus : ……………………………

Female : Udaigalum enakku
Sumai yena irukku
Kodiyidai thuvazhndu neliyudhae
Pani idhazh velukka
Mani vizhi sivakka
Thalirudal kodhitthu urugudhae

Male : Pudhiya viragam idhu
Kodiya naragam idhu
Marundhu yedhuvo
Iravu thodangiyadhum
Nilavu kilambiyadhum
Mayakkam varudho

Female : Naan kaattum
Jaadaigal sollaadhadhaa
Kannaa un nenjenna pollaadhadhaa
Oru thalai raagamaai irukkudhae

Male : Yaar yaaro enakku potti
Naan vandhen kodiyai naatti

Female : Ilaiyavan iniyavan isaiyilae
Yevarumae mayanguvaar sabaiyilae

Male : Yaar yaaro
Female : Enakku potti
Male : Naan vandhen
Female : Kodiyai naatti

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………..

ஆண் : யார் யாரோ
எனக்குப் போட்டி
நான் வந்தேன் கொடியை நாட்டி
பெண் : இளையவன்
இனியவன் இசையிலே
எவருமே மயங்குவார் சபையிலே…

ஆண் : யார் யாரோ
எனக்குப் போட்டி………

ஆண் : சுரங்களைப் பிடித்து
லயங்களில் தொடுத்து
சுகங்களைக் கொடுக்கத்
தெரிந்தவன்
கலைகளை நினைத்து
கவலையை மறந்து
சிறகுகள் விரித்துப் பறந்தவன்

பெண் : இதயம் மலர்ந்துவிட நினைவில்
எழுந்து வரும் புதிய நிலவே
இரவில் உறங்கி விடும் விழியில்
வளர்ந்து வரும் இனிய கனவே

ஆண் : பாடாத பாட்டெல்லாம்
நான் பாடுவேன் ஹே
வாங்காத பேரெல்லாம்
நான் வாங்குவேன்
புகழ் எனும்
வானில் நான் கதிரவன்

பெண் : யார் யாரோ
எனக்குப் போட்டி…….

குழு : ………………

பெண் : உடைகளும் எனக்கு
சுமை என இருக்கு
கொடியிடை துவண்டு நெளியுதே
பனி இதழ் வெளுக்க
மணி விழி சிவக்க
தளிருடல் கொதித்து உருகுதே

பெண் : புதிய விரகம்
இது கொடிய நரகம் இது
மருந்து எதுவோ
இரவு தொடங்கியதும்
நிலவு கிளம்பியதும்
மயக்கம் வருதோ

பெண் : நான் காட்டும்
ஜாடைகள் சொல்லாததா
கண்ணா உன் நெஞ்சென்ன
பொல்லாததா
ஒருதலை ராகமாய் இருக்குதே

ஆண் : யார் யாரோ
பெண் : எனக்குப் போட்டி
ஆண் : நான் வந்தேன்
பெண் : கொடியை நாட்டி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here