Singer : Sathyaprakash

Music by : G.V. Prakash Kumar

Male : Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae

Male : Vazhvilae neeini
Aayul kala nyabagam
Kaadhalae vaanam pol
Neezhugindrathae

Male : Oligal aadai moodi
Vanthathae
En koba dhabam maaruthae
Manathin aazham thedi
Thanguthae
Uyir ponguthae…

Male : Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae

Male : Vaanamena naan aanen
Megamaai mel aanen
Boomiyin dhaagam theeravae
Vaanamazhai pol aanen

Male : Neer thodum neeraanaai
Naan thedum veraanaai
Neerkumizh polae naanaagi
Neenthugira sel aanen

Male : Thadaigalellaam udaigirathae
Maraigirathae
Mazhai thuliyil malaigalellaam
Karaigirathae

Male : Manam kaalam neram thooram
Meeri vaanam thaandi oduthae
Adi neerum nellum pola naan seravae
Adi yenadi

Male : Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae

Male : Kaadhalin nyaayangal
Maalaiyil pookirathae
Aasaigalin ellai meeriyae
Aaru kadal oduthae

Male : Vedhangal ondraaga
Othidum anbellaam
Kaadhalin thoothu polavae
Kaalamagal vanthaalae

Male : Thiraigalellaam maraigirathae
Olirgirathae
Iru vizhiyil ulagamellaam
Vidigirathae….

Male : Udal yaavum meeri
Thooram koodi
Jeevan yegam aaguthae
Ada thoiyum nenjil
Thozhi vannam paayuthae
Athu yenadi

Male : Yaaradi yaaradi
Neril thondrum devathai
Paarvayin theendalil
Paadhai nooru aanathae…

பாடகர் : சத்யப்ரகாஷ்

இசையமைப்பாளர் :
ஜி. வி பிரகாஷ் குமார்

ஆண் : யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே

ஆண் : வாழ்விலே நீ இனி
ஆயுள் காலா ஞாபகம்
காதலே வானம் போல்
நீழுகின்றதே

ஆண் : ஒலிகள் ஆடை மூடி
வந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி
தங்குதே
உயிர் பொங்குதே…

ஆண் : யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே

ஆண் : வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்

ஆண் : நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்

ஆண் : தடைகளெல்லாம்
உடைகிறதே
மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம்
கரைகிறதே

ஆண் : மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல
நான் சேரவே
அடி ஏனடி

ஆண் : யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே

ஆண் : காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே

ஆண் : வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாலே

ஆண் : திரைகளெல்லாம்
மறைகிறதே
ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம்
விடுகிறதே…

ஆண் : உடல் யாவும் மீறி
தூரம் கூடி
ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில்
தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி

ஆண் : யாரடி யாரடி
நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில்
பாதை நூறு ஆனதே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here