Singer : Uthira Unnikrishnan

Music by : Santhosh Dhayanidhi

Female : Yaar parthadhu vaanil pooranam
Yaar vazhnthathu vaazhkai yaavaiyum
Naam vandhadhu sendru seravae
Kannerinil nandri kooravae

Female : Oosaigal uyir oosaigal
Unmai nenjil ozhi yetrumae
Paasamae adhu podhumae
Anbin vannam nammai theettumae

Female : Naam kaatridam moochai vaanginom
Naal theernthadhum thandhu pogirom

Chorus : Sondha uravo
Vandha uravo
Sagalamum maayam
Indha pozhudhae
Indha nodiyum
Iruvarum poi serum

Chorus : Anbu manangal
Konda viralgal
Thalaiyinai kothum
Vellai manadhil
Veru nirangal
Inaivadhum oor saabam

Female : Vaasam tharum vaarthai
Adhai yaar thaan arivaar
Pesum kuyil nesam
Adhai yaar thaan varaivaar

Female : Nadhiyilae ilaiyena
Payanam naam pogirom
Karaigalin marangalai
Vidai naam koorinom
Ezhiya… uyirgal…poi sergirom

Female : Yaar parthadhu vaanil pooranam
Yaar vazhnthathu vaazhkai yaavaiyum
Naam vandhadhu sendru seravae
Kannerinil nandri kooravae

Female : Oosaigal uyir oosaigal
Unmai nenjil ozhi yetrumae
Paasamae adhu podhumae
Anbin vannam nammai theettumae

Female : Naam kaatridam moochai vaanginom
Naal theernthadhum thandhu pogirom

பாடகி : உத்திரா உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

பெண் : யார் பார்த்தது வானில் பூரணம்
யார் வாழ்ந்தது வாழ்க்கை யாவையும்
நாம் வந்தது சென்று சேரவே
கண் நீரினில் நன்றி கூறவே

பெண் : ஓசைகள் உயிர் ஓசைகள்
உண்மை நெஞ்சில் ஒளி ஏற்றுமே
பாசமே அது போதுமே
அன்பின் வண்ணம் நம்மை தீட்டுமே

பெண் : நாம் காற்றிடம் மூச்சை வாங்கினோம்
நாள் தீர்ந்ததும் தந்து போகிறோம்

குழு : சொந்த உறவோ
வந்த உறவோ
சகலமும் மாயம்
இந்த பொழுதே
இந்த நொடியும்
இருவரும் போய் சேரும்

குழு : அன்பு மனங்கள்
கொண்ட விரல்கள்
தலையினை கோதும்
வெள்ளை மனதில்
வேறு நிறங்கள்
இணைவதும் ஊர் சாபம்

பெண் : வாசம் தரும் வார்த்தை
அதை யார்தான் அறிவார்
பேசும் குயில் நேசம்
அதை யார்தான் வரைவார்

பெண் : நதியிலே இலையென
பயணம் நாம் போகிறோம்
கரைகளின் மரங்களை
விடை நாம் கூறினோம்
எளிய….உயிர்கள்….போய் சேர்கிறோம்

பெண் : யார் பார்த்தது வானில் பூரணம்
யார் வாழ்ந்தது வாழ்க்கை யாவையும்
நாம் வந்தது சென்று சேரவே
கண் நீரினில் நன்றி கூறவே

பெண் : ஓசைகள் உயிர் ஓசைகள்
உண்மை நெஞ்சில் ஒளி ஏற்றுமே
பாசமே அது போதுமே
அன்பின் வண்ணம் நம்மை தீட்டுமே…..

பெண் : நாம் காற்றிடம் மூச்சை வாங்கினோம்
நாள் தீர்ந்ததும் தந்து போகிறோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here