Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu
Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu

Male : Thaazhnthorum oru naalil
Vaazhvathundu magalae
Thaai veettu seedhanamaai varuvathundu
Magalae thaai veettu seedhanamaai varuvathundu

Male : Eththanai penn piranthaar
Eththanai per vaazhvizhanthaar
Eththanai penn piranthaar
Eththanai per vaazhvizhanthaar
Aththanaikkum kaaranangal yaedhadi magalae
Aathmaavin thairiyamthaan keladi
Aathmaavin thairiyamthaan keladi

Male : Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu

Male : Vaazhnthae theervathendru
Vairaakkiyam kondu vidu
Vaazhnthae theervathendru
Vairaakkiyam kondu vidu
Saavaiyum vendridalaam vazhiyilae magalae
Sanjalamae illai unthan vidhiyilae

Male : Thuninthaal thuyaramillai
Thukkamillai vetkkamillai
Paninthaalthaan adakki
Vaippaar ulagilae magalae
Paainthaalae paninthiduvaar kaalilae

Male : Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu

Male : Seedhaiyin kadhaiyinilae
Sriraman thunaikku vanthaan
Seedhaiyin kadhaiyinilae
Sriraman thunaikku vanthaan
Sriraman perumaiyillai adhanilae
Adhu seedhaiyin perumaiyadi kadhaiyilae

Male : Paanjaali kuzhal mudinthaal
Paththiniyaal oor eriththaal
Aan jaathi kadhaiyalla avaiyadi unaipol
Penn jaathi perumai sollum kadhaiyadi

Male : Yaarukkum vaazhkkai undu
Adharkkoru neram undu

Male : Thaazhnthorum oru naalil
Vaazhvathundu magalae
Thaai veettu seedhanamaai varuvathundu
Magalae thaai veettu seedhanamaai varuvathundu

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு

ஆண் : தாழ்ந்தோறும் ஒரு நாளில்
வாழ்வதுண்டு மகளே
தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு….
மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு….

ஆண் : எத்தனை பெண் பிறந்தார்
எத்தனை பேர் வாழ்விழந்தார்
எத்தனை பெண் பிறந்தார்
எத்தனை பேர் வாழ்விழந்தார்
அத்தனைக்கும் காரணங்கள் ஏதடி மகளே
ஆத்மாவின் தைரியம்தான் கேளடி
ஆத்மாவின் தைரியம்தான் கேளடி

ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு

ஆண் : வாழ்ந்தே தீர்வதென்று
வைராக்கியம் கொண்டு விடு
வாழ்ந்தே தீர்வதென்று
வைராக்கியம் கொண்டு விடு
சாவையும் வென்றிடலாம் வழியிலே மகளே
சஞ்சலமே இல்லை உந்தன் விதியிலே

ஆண் : துணிந்தால் துயரமில்லை
துக்கமில்லை வெட்கமில்லை
பணிந்தால்தான் அடக்கி
வைப்பார் உலகிலே மகளே
பாய்ந்தாலே பணிந்திடுவார் காலிலே

ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு

ஆண் : சீதையின் கதையினிலே
ஸ்ரீராமன் துணைக்கு வந்தான்
சீதையின் கதையினிலே
ஸ்ரீராமன் துணைக்கு வந்தான்
ஸ்ரீராமன் பெருமையில்லை அதனிலே
அது சீதையின் பெருமையடி கதையிலே

ஆண் : பாஞ்சாலி குழல் முடிந்தாள்
பத்தினியாள் ஊர் எரித்தாள்
ஆண் ஜாதி கதையல்ல அவையடி உனைப்போல்
பெண் ஜாதி பெருமை சொல்லும் கதையடி

ஆண் : யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு

ஆண் : தாழ்ந்தோறும் ஒரு நாளில்
வாழ்வதுண்டு மகளே
தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு….
மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here