Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Yaetriya dheepam eriya vidu
Erigindra manathai kuliravidu
Yaetriya dheepam eriya vidu
Erigindra manathai kuliravidu

Female : Magara vilakkugal aayiram yaetriya
Koyil un koyilandro
Adhil naanoru dheepamandro
Magara vilakkugal aayiram yaetriya
Koyil un koyilandro
Adhil naanoru dheepamandro

Female : Idhu yaar seitha paavam
En mel enna kobam
Edhuvam ariyaen
Thunai un paadham aiyaa

Female : Varum thunbangal theerppaai
En maangalyam kaappaai
Saranam saranam enum
Un naamam poiyaa

Female : Kanneeril naan seiyum aaraathanai
Manikandaa en vaazhvodu yaen sodhanai
Kanneeril naan seiyum aaraathanai
Manikandaa en vaazhvodu yaen sodhanai

Female : Yaetriya dheepam eriya vidu
Erigindra manathai kuliravidu

Female : Oru pen ennum jenmam
Idhu ennaalum thunbam
Kanavan pazhiyaal sumai naan thaangi nindren
Un paadhangal pottrum en senthooram vendum
Adhuthaan dhnamum unai naan vendi vanthen

Female : Poovoda vilaiyaada bhoogampamaa
En poojaikku padhilenna un mounamaa

Female : Yaetriya dheepam eriya vidu
Erigindra manathai kuliravidu
Magara vilakkugal aayiram yaetriya
Koyil un koyilandro
Adhil naanoru dheepamandro

Female : Therinthum theriyaamalum
Arinthum ariyaamalum seitha
Sagala kuttrangalaiyum pizhaigalaiyum
Poruththu kaaththu ratchiththu arula vendum

Female : Om saththiyamaaya ponnu
Pathinettaam padi mel vaazhum
Om harihara sudhan anantha siththan
Aiyyan aiyyappa swaamiyae saranam aiyappaa….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விசுவநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஏற்றிய தீபம் எரிய விடு
எரிகின்ற மனதை குளிரவிடு
ஏற்றிய தீபம் எரிய விடு
எரிகின்ற மனதை குளிரவிடு

பெண் : மகர விளக்குகள் ஆயிரம் ஏற்றிய
கோயில் உன் கோயிலன்றோ
அதில் நானொரு தீபமன்றோ
மகர விளக்குகள் ஆயிரம் ஏற்றிய
கோயில் உன் கோயிலன்றோ
அதில் நானொரு தீபமன்றோ

பெண் : இது யார் செய்த பாவம்
என் மேல் என்ன கோபம்
எதுவும் அறியேன்
துணை உன் பாதம் ஐயா

பெண் : வரும் துன்பங்கள் தீர்ப்பாய்
என் மாங்கல்யம் காப்பாய்
சரணம் சரணம் எனும்
உன் நாமம் பொய்யா

பெண் : கண்ணீரில் நான் செய்யும் ஆராதனை
மணிகண்டா என் வாழ்வோடு ஏன் சோதனை
கண்ணீரில் நான் செய்யும் ஆராதனை
மணிகண்டா என் வாழ்வோடு ஏன் சோதனை

பெண் : ஏற்றிய தீபம் எரிய விடு
எரிகின்ற மனதை குளிரவிடு

பெண் : ஒரு பெண் என்னும் ஜென்மம்
இது எந்நாளும் துன்பம்
கணவன் பழியால் சுமை நான் தாங்கி நின்றேன்
உன் பாதங்கள் போற்றும் என் செந்தூரம் வேண்டும்
அதுதான் தினமும் உனை நான் வேண்டி வந்தேன்

பெண் : பூவோட விளையாட பூகம்பமா
என் பூஜைக்கு பதிலென்ன உன் மௌனமா

பெண் : ஏற்றிய தீபம் எரிய விடு
எரிகின்ற மனதை குளிரவிடு
மகர விளக்குகள் ஆயிரம் ஏற்றிய
கோயில் உன் கோயிலன்றோ
அதில் நானொரு தீபமன்றோ

பெண் : தெரிந்தும் தெரியாமலும்
அறிந்தும் அறியாமலும் செய்த
சகல குற்றங்களையும் பிழைகளையும்
பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும்

பெண் : ஓம் சத்தியமாய பொன்னு
பதினெட்டாம் படி மேல் வாழும்
ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன்
ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here