Singer : Vani Jairam

Music by : Deva

Lyrics by : Vairamuthu

Female : Yaezhai veettil pooththa kaalai nera poove
Yaekkam enna maanae thookkam kollu thaenae
Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae
Naanirukkaen kaalam muzhuthum
Naalai pozhuthu maarumae

Female : Yaezhai veettil pooththa kaalai nera poove
Yaekkam enna maanae thookkam kollu thaenae

Female : Aagaaya panthal idhilae anjumalar pooththathu
Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu
Aagaaya panthal idhilae anjumalar pooththathu
Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu

Female : Poovondru vaasam maranthu veraththaan thaanguthu
Pongammaa neegal endru oru mullai thoonguthu
Pesaamal oru pillai ullam moochchu vaanguthu

Female : Yaezhai veettil pooththa kaalai nera poove
Yaekkam enna maanae thookkam kollu thaenae

Female : Pennukkul veeramundu kannukkullae paasamundu
Mannellaam aalugindra maanbumigu nyaanamundu
Pennukkul veeramundu kannukkullae paasamundu
Mannellaam aalugindra maanbumigu nyaanamundu

Female : Maanamthaan needhi endra manathukkul theeyum undu
Poraattam thaangum nenjin
Porumaikku vaazhvum undu
Nee kooda magaraani thaayin kanavu thaanammaa

Female : Yaezhai veettil pooththa kaalai nera poove
Yaekkam enna maanae thookkam kollu thaenae
Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae
Naanirukkaen kaalam muzhuthum
Naalai pozhuthu maarumae
Mmmm….mmm…..mm….mmm….

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : ………………..

பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே
நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே
நானிருக்கேன் காலம் முழுதும்
நாளை பொழுது மாறுமே

பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

பெண் : ஆகாயப் பந்தல் இதிலே அஞ்சுமலர் பூத்தது
பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது
ஆகாயப் பந்தல் இதிலே அஞ்சுமலர் பூத்தது
பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது

பெண் : பூவொன்று வாசம் மறந்து வேரைத்தான் தாங்குது
போங்கம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது
பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது

பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே

பெண் : பெண்ணுக்குள் வீரமுண்டு கண்ணுக்குள்ளே பாசமுண்டு
மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானமுண்டு
பெண்ணுக்குள் வீரமுண்டு கண்ணுக்குள்ளே பாசமுண்டு
மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானமுண்டு

பெண் : மானம் தான் நீதி என்ற மனதுக்குள் தீயும் உண்டு
போராட்டம் தாங்கும் நெஞ்சின்
பொறுமைக்கு வாழ்வும் உண்டு
நீ கூட மகராணி தாயின் கனவு தானம்மா

பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே
ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே
நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே
நானிருக்கேன் காலம் முழுதும்
நாளை பொழுது மாறுமே
ம்ம்ம்…….ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here