Singers : A. P. Komala and K. Rani

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Yavvaname en yavvanamae
Anbodu kaalam alli vazhangum seedhnamae
Yavvaname en yavvanamae

Female : Azhaginilae en azhaginilae
Aadavarellam aasai kolvaar ulaginilae
Azhaginilae en azhaginilae

Female : Thavayogi manam maari thadumaaravae
Thavayogi manam maari thadumaaravae
Thalir polae ilam maeni oli veesudhae
Endhan yavvaname en yavvanamae
Anbodu kaalam alli vazhangum seedhnamae
Yavvaname en yavvanamae

Female : Kalaivaanar malar thoovi kavi paadavae
Kalaivaanar malar thoovi kavi paadavae
Ezhil veesum vizhiyaalae mozhi pesudhae
Endhan azhaginilae en azhaginilae
Aadavarellam aasai kolvaar ulaginilae
Azhaginilae en azhaginilae

Female : Ilamai illaiyenil azhagedhu
Naam inbam adaiyavae iyalaadhu
Ilamai illaiyenil azhagedhu
Naam inbam adaiyavae iyalaadhu

Female : Azhagindri yavvanam uyarvaguma
Azhagindri yavvanam uyarvaguma
Adhanaalae payan yedhamma

Both : Ezhil odu inaiyaaga pudhu vaalibam
Ezhil odu inaiyaaga pudhu vaalibam
Valamaaga valarnthoonga vazhi theduvom
Endrum azhagudane namm yavvanamae
Anbodu kaalam alli vazhangum seedhanamae
Azhagudane namm yavvanamae

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் கே. ராணி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

பெண் : யௌவனமே என் யௌவனமே
அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே
யௌவனமே என் யௌவனமே

பெண் : அழகினிலே என் அழகினிலே
ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே
அழகினிலே என் அழகினிலே

பெண் : தவயோகி மனம் மாறி தடுமாறவே
தவயோகி மனம் மாறி தடுமாறவே
தளிர் போலே இளம் மேனி ஒளி வீசுதே
எந்தன் யௌவனமே என் யௌவனமே
அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே
யௌவனமே என் யௌவனமே

பெண் : கலைவாணர் மலர் தூவி கவி பாடவே
கலைவாணர் மலர் தூவி கவி பாடவே
எழில் வீசும் விழியாலே மொழி பேசுதே
எந்தன் அழகினிலே என் அழகினிலே
ஆடவரெல்லாம் ஆசை கொள்வார் உலகினிலே
அழகினிலே என் அழகினிலே

பெண் : இளமை இல்லையெனில் அழகேது நாம்
இன்பம் அடையவே இயலாது
இளமை இல்லையெனில் அழகேது நாம்
இன்பம் அடையவே இயலாது

பெண் : அழகின்றி யௌவனம் உயர்வாகுமா
அழகின்றி யௌவனம் உயர்வாகுமா
அதனாலே பயன் ஏதம்மா

இருவர் : எழிலோடு இணையாக புது வாலிபம்
எழிலோடு இணையாக புது வாலிபம்
வளமாக வளர்ந்தோங்க வழி தேடுவோம்
என்றும் அழகுடனே நம் யௌவனமே
அன்போடு காலம் அள்ளி வழங்கும் சீதனமே……!
அழகுடனே நம் யௌவனமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here