Singer : Latha and Pushpalatha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Yaendiyammaa idhukku peru naagareegamaa
Naalu ezhuthu padichchu vanthaalae intha kolamaa
Yaendiyammaa idhukku peru naagareegamaa
Naalu ezhuthu padichchu vanthaalae intha kolamaa

Female : Kudumpa ponnaa latchanamaa irukkakoodaathaa
Kudumpa ponnaa latchanamaa irukkakoodaathaa
Mugaththil kungumamum manjalittaal azhagu varaathaa

Female : Thalai niraiya poova vachchu
Thazhaiya thazhaiya podava katti
Kovil silaiyai pola
Ponnu nadakka venumae
Nalla kula vilakku endra perai edukka venumae

Female : Yaendiyammaa idhukku peru naagareegamaa
Naalu ezhuthu padichchu vanthaalae intha kolamaa

Female : Ettu kajam pudavaiyellaam waste waste
Ettu kajam pudavaiyellaam waste waste
Intha naagareegam thaanae ippa taste taste
Ulagam pogum vegam rompa fast fast
Unara vendum neegal adhai sweet sweet
Unara vendum neegal adhai sweet sweet

Female : Dosa kalla pola oru mookku kannaadi
Thodaiyai irukki kaattum vidhaththil thunigal ennaadi
Paasimaniyai pottu kuraththi vesam ennaadi
Ada paiyan yaaru ponnu yaaru theriyalla podi
Ada paiyan yaaru ponnu yaaru theriyalla podi

Female : Azhagai kaattaththaanae pennai aanadavan padachchaan
Aadipaadi rasikkavendrae vaazhkkaiyai koduththaan
Azhagai kaattaththaanae pennai aanadavan padachchaan
Aadipaadi rasikkavendrae vaazhkkaiyai koduththaan

Female : Irukkum varaiyil anupaviththu naam vaazha vendumae
Idhanai unarumpothu ulagam nammai mathikkumae

Female : Aaththukkaarar mattumthaandi azhagai rasikkanum
Aduththavaalin kannukkellaam deivamaaganum
Naalu peru paarkkumpothu penmai vaazhanum
Tamizh naattu pennai ulagam paarththu vaazhththu paadanum

Female : Hai please company with me
Matni cinima marina hotel
Cobere dance-yum kirukiru drink-um
Ellaam paarththu iravai suvaiththu
Poe varuvom vaa pulpulthaaraa

Female : Haei what do you mean
Kanniyar meedhu anniyan neeyum
Kaigalai pottu kanavanai polae
Pesuthaal muraiyaa poevidu po po

Female : Aaththukkaarar mattumthaandi azhagai rasikkanum
Aduththavaalin kannukkellaam deivamaaganum
Naalu peru paarkkumpothu penmai vaazhanum
Tamizh naattu pennai ulagam paarththu vaazhththu paadanum

பாடகர்கள் : லதா மற்றும் புஷ்பலதா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஏன்டியம்மா இதுக்கு பேரு நாகரீகமா
நாலு எழுத்து படிச்சு வந்தாலே இந்தக் கோலமா
ஏன்டியம்மா இதுக்கு பேரு நாகரீகமா
நாலு எழுத்து படிச்சு வந்தாலே இந்தக் கோலமா

பெண் : குடும்பப் பொண்ணா லட்சணமா இருக்கக்கூடாதா
குடும்பப் பொண்ணா லட்சணமா இருக்கக்கூடாதா
முகத்தில் குங்குமமும் மஞ்சளிட்டால் அழகு வராதா

பெண் : தலை நிறைய பூவ வச்சு
தழைய தழைய பொடவ கட்டி
கோவில் சிலையை போல
பொண்ணு நடக்க வேணுமே
நல்ல குல விளக்கு என்ற பேரை எடுக்க வேணுமே

பெண் : ஏன்டியம்மா இதுக்கு பேரு நாகரீகமா
நாலு எழுத்து படிச்சு வந்தாலே இந்தக் கோலமா

பெண் : எட்டு கஜம் புடவையெல்லாம் வேஸ்ட் வேஸ்ட்
எட்டு கஜம் புடவையெல்லாம் வேஸ்ட் வேஸ்ட்
இந்த நாகரீகம் தானே இப்ப டேஸ்ட் டேஸ்ட்
உலகம் போகும் வேகம் ரொம்ப பாஸ்ட் பாஸ்ட்
உணர வேண்டும் நீங்கள் அதை ஸ்வீட் ஸ்வீட்….
உணர வேண்டும் நீங்கள் அதை ஸ்வீட் ஸ்வீட்….

பெண் : தோசக் கல்ல போல ஒரு மூக்குக்கண்ணாடி
தொடையை இறுக்கி காட்டும் விதத்தில் துணிகள் என்னாடி
பாசிமணியை போட்டு குறத்தி வேஷம் என்னாடி
அட பையன் யாரு பொண்ணு யாரு தெரியல்ல போடி
அட பையன் யாரு பொண்ணு யாரு தெரியல்ல போடி

பெண் : அழகைக் காட்டத்தானே பெண்ணை ஆண்டவன் படச்சான்
ஆடிப்பாடி ரசிக்கவென்றே வாழ்க்கையை கொடுத்தான்
அழகைக் காட்டத்தானே பெண்ணை ஆண்டவன் படச்சான்
ஆடிப்பாடி ரசிக்கவென்றே வாழ்க்கையை கொடுத்தான்

பெண் : இருக்கும் வரையில் அனுபவித்து நாம் வாழவேண்டுமே
இதனை உணரும்போது உலகம் நம்மை மதிக்குமே….

பெண் : ஆத்துக்காரர் மட்டும்தான்டி அழகை ரசிக்கணும்
அடுத்தவாளின் கண்ணுக்கெல்லாம் தெய்வமாகணும்
நாலு பேரு பார்க்கும்போது பெண்மை வாழணும்
தமிழ் நாட்டுப் பெண்ணை உலகம் பார்த்து வாழ்த்து பாடணும்

பெண் : ஹாய் ப்ளீஸ் கம்பெனி வித் மீ
மேட்னி சினிமா மெரீனா ஹோட்டல்
காபரே டான்ஸும் கிறுகிறு ட்ரிங்ஸூம்
எல்லாம் பார்த்து இரவை சுவைத்து
போய் வருவோம் வா புல்புல்தாரா

பெண் : ஹேய்…வாட் டு யூ மீன்
கன்னியர் மீது அந்நியன் நீயும்
கைகளை போட்டு கணவனைப் போலே
பேசுதல் முறையா போய்விடு போ போ….

பெண் : ஆத்துக்காரர் மட்டும்தான்டி அழகை ரசிக்கணும்
அடுத்தவாளின் கண்ணுக்கெல்லாம் தெய்வமாகணும்
நாலு பேரு பார்க்கும்போது பெண்மை வாழணும்
தமிழ் நாட்டுப் பெண்ணை உலகம் பார்த்து வாழ்த்து பாடணும்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here