Singers : P. Susheela and P. Jayachandran

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vairamuthu

Male : Yaedho oru raagam yaeno adhil sogam
Santham vanthathu adhil yaedho sontham vanthathu
Un paadal ennai vendrathu
Uyirodu ullam sendrathu
Kaanamal thalli nindru thaththalikkum aavi
Vaaraayo enthan devi

Male : Yaedho oru raagam yaeno adhil sogam

Female : Aaa…..aaa….aa….aa….aa….aa…aa….aa
Kannaa en mel pizhaiyae illai
Siraiyai murikka sirakillai
Kannil innum kanneer illai
Velichcham irunthum pagalillai
Adainthaen unnai idhuvey pothum
Iniyun raagam ivalin vedham

Male : Yaezhai kelaatha poobhaalam indru ketkindratho
Paalaivanamengum paalodai vanthu paaigindratho
Kanavaa nanavaa needhaanaa neeyaethaanaa

Male : Yaedho oru raagam yaeno adhil sogam

Female : Unnai enni paadumpothu
Neruppai sudum en perumoochchu
Kannaa unnai kannaal kandaen
Sarugo meendum thaliraachchu
Idhayam engum inbam kollai
Ini en vaazhvil iravey illai

Male : Kadalilae saerntha
Aarondru meendu varugindrathu
Sonna sol indru maaraamal
Theenda varugindrathu
Thuyarai eriththaen en vaazhvil sogam yaedhu

Female : Yaedho oru raagam yaedho adhil mogam
Santham vanththu adhil yaedho sonthaam vanthathu
Un paadal ennai vendrathu
Uyirodu ullam sendrathu
Kaanaamal thalli nendru thaththalikkum aavi
Ododi vanthaal devi

Female : Yaedho oru raagam yaedho adhil mogam….

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி
வாராயோ எந்தன் தேவி

ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

பெண் : ஆஆ…..ஆஆ…..ஆ….ஆ….ஆ…ஆ….ஆ….ஆஆ..
கண்ணா என் மேல் பிழையே இல்லை
சிறையை முறிக்க சிறகில்லை
கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை
வெளிச்சம் இருந்தும் பகலில்லை
அடைந்தேன் உன்னை இதுவே போதும்
இனியுன் ராகம் இவளின் வேதம்

ஆண் : ஏழை கேளாத பூபாளம் இன்று கேட்கின்றதோ
பாலைவனமெங்கும் பாலோடை வந்து பாய்கின்றதோ
கனவா நனவா நீதானா நீயேதானா

ஆண் : ஏதோ ஒரு ராகம் ஏனோ அதில் சோகம்

பெண் : உன்னை எண்ணி பாடும்போது
நெருப்பை சுடும் என் பெருமூச்சு
கண்ணா உன்னை கண்ணால் கண்டேன்
சருகோ மீண்டும் தளிராச்சு
இதயம் எங்கும் இன்பம் கொள்ளை
இனி என் வாழ்வில் இரவே இல்லை

ஆண் : கடலிலே சேர்ந்த
ஆறொன்று மீண்டு வருகின்றது
சொன்ன சொல் இன்று மாறாமல்
தீண்ட வருகின்றது
துயரை எரித்தேன் என் வாழ்வில் சோகம் ஏது

பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்
சந்தம் வந்தது அதில் ஏதோ சொந்தம் வந்தது
உன் பாடல் என்னை வென்றது
உயிரோடு உள்ளம் சென்றது
காணாமல் தள்ளி நின்று தத்தளிக்கும் ஆவி
ஓடோடி வந்தாள் தேவி

பெண் : ஏதோ ஒரு ராகம் ஏதோ அதில் மோகம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here