Singers : Hariharan and Sujatha

Music by : Ilayaraja

Chorus : ………………….

Female : Oho ooho oo….
Yaedho yaedho nenjil oru minnal
Engo engo thaedi paarkkum kangal
Enna kaaranam oho yaarai kaetpadho oho
Kaadhal seiyum maaya leelai idhu thaano

Male : Yaedho yaedho nenjil oru minnal
Yengo yengo thaedi paarkkum kangal

Male : Maalai pozhudhum veesum vaadai kaatrum
Solvadhennavo kaadhal raagam thaanaa
Swarangalin abinayam adhu oru pudhu sugam

Female : Aatrin alaiyum aadum vaasa poovum
Kaetpadhennavo kaadhal raagam thaanaa
Idhu oru anubavam isai ennum adhisayam

Male : Naanaagavae naan illaiyae
Naanaagavae naan illaiyae

Female : Ennavendru naan solla
Innum enna naan solla vaa vaa anbae vaa

Male : Yaedho yaedho nenjil oru minnal
Engo engo thaedi paarkkum kangal

Chorus : ……………….

Female : Unnai ninaiththae
Meettum veenai yaengum
Veenai madiyil kaadhal raagam thoongum
Uravena nee iru oru kanam viral thodu

Male : Ennat thiraiyil vanna kolam podu
Vanna kanavil vandhu vilaiyaadu
Sugam ennum alai varum
Ilamaiyum valai idum

Female : Paarkkaadhadhu kaetkaadhadhu
Paarkkaadhadhu kaetkaadhadhu
Vaerengilum kaanaadhadhu

Male : Kaadhal maedaiyil
Ingae kaana vaendum
Indrae vaa vaa anbae

Female : Yaedho yaedho nenjil oru minnal
Male : Engo eengo thaedi paarkkum kangal
Female : Enna kaaranam oho yaarai kaetpadho oho
Male : Kaadhal seiyum maaya leelai idhu thaano

Female : Yaedho yaedho nenjil oru minnal
Male : Engo engo thaedi paarkkum kangal

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………………

பெண் : ஓஹோஓஹோ ஓ……
ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்
என்ன காரணம் ஓஹோ யாரைக் கேட்பதோ ஒஹோ
காதல் செய்யும் மாய லீலை இது தானோ

ஆண் : ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்

ஆண் : மாலைப் பொழுதும் வீசும் வாடைக் காற்றும்
சொல்வதென்னவோ காதல் ராகம் தானா
ஸ்வரங்களின் அபிநயம் அது ஒரு புது சுகம்

பெண் : ஆற்றின் அலையும் ஆடும் வாசப் பூவும்
கேட்பதென்னவோ காதல் ராகம் தானா
இது ஒரு அனுபவம் இசை என்னும் அதிசயம்

ஆண் : நானாகவே நானில்லையே
நானாகவே நானில்லையே
பெண் : என்னவென்று நான் சொல்ல
இன்னும் என்ன நான் சொல்ல வா வா அன்பே வா

ஆண் : ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்

குழு : ……………………….

பெண் : உன்னை நினைத்தே
மீட்டும் வீணை ஏங்கும்
வீணை மடியில் காதல் ராகம் தூங்கும்
உறவென நீ இரு ஒரு கணம் விரல் தொடு

ஆண் : எண்ணத் திரையில்
வண்ணக் கோலம் போடு
வண்ணக் கனவில் வந்து விளையாடு
சுகம் என்னும் அலை வரும்
இளமையும் வலையிடும்

பெண் : பார்க்காதது கேட்காதது
பார்க்காதது கேட்காதது
வேறெங்கிலும் காணாதது

ஆண் : காதல் மேடையில்
இங்கே காண வேண்டும்
இன்றே வா வா அன்பே

பெண் : ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
ஆண் : எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்
பெண் : என்ன காரணம் ஓஹோ யாரைக் கேட்பதோ ஒஹோ
ஆண் : காதல் செய்யும் மாய லீலை இது தானோ

பெண் : ஏதோ ஏதோ நெஞ்சில் ஒரு மின்னல்
ஆண் : எங்கோ எங்கோ தேடிப் பார்க்கும் கண்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here