Singer : Andrea Jeremiah

Music by : Santhosh Narayanan

Lyrics by : Uma Devi

Female : Edhu naan ingae
Enai naan enben
Maraipodum thiraigal naanaa

Female : Edhu naan ingae
Enai naan enben
Vasaipaadum dhisaigal naanaa

Female : Yaaro neidha veligal
Enai soozhum ennangal
Therai saetril saaithidum
Pollaadha kolangal

Female : Edhu naan ingae
Enai naan enben
Maraipodum thiraigal naanaa

Female : Edhu naan ingae
Enai naan enben
Vasaipaadum dhisaigal naanaa

Female : {Theeyodu poradum
Thaenkooda naaningae
Thee vaikkum poimaigal
Theerkkindra naalingae} (2)

Female : Haa..aaaa….

Female : Mannin suvaithaan
Marathin kaniyae
Ilaiyin alavae kilaiyin nizhalae

Female : Kadalenna sangil adangiduma
Katrenna kuzhalil odungiduma
Punithangal sumandhathu podhum
Ingu puzhuthikkul pudhainthathu podhum

Female : {Theeyodu poradum
Thaenkooda naaningae
Thee vaikkum poimaigal
Theerkkindra naalingae} (2)

Female : Haa..aaa…

Female : Muthugilae kallai katti
Moochilae sollai thaithu
Aatrilae veesinaalum
Nimirthidu aruvigal polae
Nimirthidu aruvigal polae

Female : Kadal thaandum katrellaam
Parakka marukkathae
Kaattaru vellam nee thembi nirkkathae

Female : {Theeyodu poradum
Thaenkooda naaningae
Thee vaikkum poimaigal
Theerkkindra naalingae} (2)

Female : Edhu naan ingae
Enai naan enben
Maraipodum thiraigal naanaa

Female : Udal thaan ingae
Vidai thaan endraal
Andha poimai thurappen

Female : {Theeyodu poradum
Thaenkooda naaningae
Thee vaikkum poimaigal
Theerkkindra naalingae} (2)

பாடகி : ஆண்ட்ரியா ஜெரெமையா

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : உமா தேவி

பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா

பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
வசைபாடும் திசைகள் நானா

பெண் : யாரோ நெய்த வேலிகள்
எனை சூழும் எண்ணங்கள்
தேரை சேற்றில் சாய்த்திடும்
பொல்லாத கோலங்கள்

பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா

பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
வசைபாடும் திசைகள் நானா

பெண் : {தீயோடு போராடும்
தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள்
தீர்க்கின்ற நாளெங்கே} (2)

பெண் : ஹா..ஆஅ…

பெண் : மண்ணின் சுவைதான்
மரத்தின் கனியே
இலையின் அளவே
கிளையின் நிழலே

பெண் : கடலென்ன சங்கில் அடங்கிடுமா
காற்றென்ன குழலில் ஒடுங்கிடுமா
புனிதங்கள் சுமந்தது போதும்
இங்கு புழுதிக்குள் புதைந்தது போதும்

பெண் : {தீயோடு போராடும்
தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள்
தீர்க்கின்ற நாளெங்கே} (2)

பெண் : ஹா ..ஆஅ..

பெண் : முதுகிலே கல்லை கட்டி
மூச்சிலே சொல்லை தைத்து
ஆற்றிலே வீசினாலும்
நிமிர்ந்திடு அருவிகள் போலே
நிமிர்ந்திடு அருவிகள் போலே

பெண் : கடல் தாண்டும் காற்றெல்லாம்
பறக்க மறுக்காதே
காட்டாறு வெள்ளம் நீ
தேம்பி நிற்காதே

பெண் : {தீயோடு போராடும்
தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள்
தீர்க்கின்ற நாளெங்கே} (2)

பெண் : எது நான் இங்கே
எனை நான் என்பேன்
மறைபோடும் திரைகள் நானா

பெண் : உடல் தான் இங்கே
விடை தான் என்றால்
அந்த பொய்மை துறப்பேன்

பெண் : {தீயோடு போராடும்
தேன்கூடா நானிங்கே
தீ வைக்கும் பொய்மைகள்
தீர்க்கின்ற நாளெங்கே} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here