Singer : P. Susheela

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae
Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae
Yaelae ilangiliyae ennaasai paingiliyae
Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae

Female : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka
Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka
Dheivamthaan thanthathu unnaiththaan ilangiliyae

Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae
Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae

Male : Kuzhalodum yaalodum isai ketta pothum
Mazhalai un sol pola isai aavathaethu
Kuzhalodum yaalodum isai ketta pothum
Mazhalai un sol pola isai aavathaethu

Female : Yaaradi unnai padaiththaar
Annaiyum thanthaiyum illai
Unnai en kaiyil koduththaar
Dheivamaa nampavumillai
Anbilae anpai inaiththu
Vambugal seivathum enna
Unmaithaan solladi
Selvamae sirikkaathae

Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae
Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae

Female : Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae
Alai veesum kadal pola tamil paadum kodiyae
Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae
Alai veesum kadal pola tamil paadum kodiyae

Female : Moodadi vaasarkadhavai kangalthaan pattu vidumae
Paadadi paasakkavithai nenjanthaan kettu vidumae

Female : Endraikko ezhuthi vaiththaan
Indraikku nadappathellaam
Unmaithaan mullaiyae
Ennaiyae naan maranthaen

Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae
Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae

Female : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka
Dheivamthaam thanthathu unnaiththaan ilangiliyae

Female : Yaelae ilangiliyae ennaasai paingiliyae
Paalae pasungkodiyae painthamizhin thaensuvaiyae

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : இளையராஜா

பெண் : ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே
ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே

பெண் : நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே…..

பெண் : ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே

பெண் : குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழலை உன் சொல் போல இசை ஆவதேது
குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழலை உன் சொல் போல இசை ஆவதேது

பெண் : யாரடி உன்னைப் படைத்தார்
அன்னையும் தந்தையும் இல்லை
உன்னை என் கையில் கொடுத்தார்
தெய்வமா நம்பவுமில்லை
அன்பிலே அன்பை இணைத்து
வம்புகள் செய்வதும் என்ன
உண்மைதான் சொல்லடி செல்வமே சிரிக்காதே

பெண் : ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே
பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தேன்சுவையே

பெண் : மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே
மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே

பெண் : மூடடி வாசற்கதவை கண்கள்தான் பட்டு விடுமே
பாடடி பாசக்கவிதை நெஞ்சந்தான் கெட்டு விடுமே

பெண் : என்றைக்கோ எழுதி வைத்தான்
இன்றைக்கு நடப்பதெல்லாம்
உண்மை தான் முல்லையே
என்னையே நான் மறந்தேன்………..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here